Friday, March 26, 2010

இரசிக்க வைக்கும் பாடல் வரிகள்

"பொய்யிலாமல் காதல் இல்லை, பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்". இந்த வரிகள் 'சொல்லாயோ சோலைக்கிளி' என்ற பாட்டின் இடையே வரும்.

 கவிதைக்கு பொய் அழகு என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் காதலுக்கும் பொய் அழகு என்ற கருத்தை நம்மிடையே விட்டுச் செல்லும் வரிகள் இவை. காதலில் உண்மையும் நம்பிக்கையும் தான் முக்கியம் என்பது நமது கூற்று. அனால் அதை கட்டுடைக்கும் வரிகள் இவை.

****

 'சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம்தானே, தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடந்தானே'. 'கத்தாழ காட்டு வழி' என்னும் பாட்டில் இடம் பெற்ற வரி.

தவளை நீரிலும் நிலத்திலும் வாழும், அதற்கென்று ஒரு தனி இடம் கிடையாது.
பிறந்த வீடு விட்டு புகுந்த வீடு செல்லும் பெண்ணை தவளையோடு ஒப்பிட்டிருப்பார் கவிஞர். தவளை தண்ணீருக்கும் நிலத்திற்கும் மாறி மாறி தாவும். பெண்ணும், பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டையும் விட்டுக் கொடுக்காமல் அலைபாயும் மனதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

****

புத்தம் புது பூமி வேண்டும்' என்ற பாடலில் அனைத்து வரிகளும் மனதை கொள்ளை கொள்ளும்.  அதில்நான் மிகவும் ரசித்தது

'சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்'.

சொந்தமாக ஆகாயமே கிடைத்தாலும் ஜோடியாக நிலவும் வேண்டும் என்ற கற்பனை சிலிர்க்க வைக்கிறது. காற்றே இல்லாத நிலவில் தேவையான போது மழையும் வேண்டும் என்பது சற்று அதிகப்படியோ! கவிதைக்கு பொய் அழகு என்பதை மீண்டும் நிரூபிக்கும் கற்பனை.

****

'மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்'

காதலன் தன் காதலியிடம் "நீ விரும்பாவிட்டாலும் விரும்புவதாக ஒரு பொய் சொன்னாலே போதும் அதில் என் உயிர் வாழும்" என்று கூறுவது நம் உணர்வுகளை த(எ)ட்டிப் பார்க்கும் வரிகள். இந்த இடத்தில் முதலில் நான் குறிப்பிட்டிருந்த பாடலின் வரிகளை நினைவு கொள்கிறேன். இங்கும் பொய் என்பது காதலை வாழ வைக்கும் ஒரு நிஜமாகவே இருக்கிறது.

****

'மனதில் ஓசைகள்
இதழில் மெளனங்கள்
ஏன் என்று கேளுங்கள்'

இந்த வரிகளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 'மெளனமான நேரம்' பாடலில் வரும் இவ்வரிகள் வெறும் எழுத்தோ அல்லது  ஓசையோ மட்டும் அல்ல. மனதில் எத்தனை ஆசைகள் இருந்தாலும் இதழில் மெளனம் சாதிக்கும் ஒருவன் இந்த மெளனத்தின் காரணம் என்ன என்று கேளுங்கள் என்று நம்மிடம் மன்றாடுவதாய் அமைந்திருக்கிறது. எழுதிய கவிஞனின் கற்பனை தொட முடியாத தூரம்.

****

'பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கற்பத்தில் நானே கலைந்திருப்பேனே'

ஒரு பெண் தன் பிறப்பைப் பற்றி சுய பச்சாதாபம் கொண்டு வெளியிடும் வேதனையை இதைவிட அழகாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

இன்னும் இதுபோன்று பல பாடல் வரிகளை சொல்லிக் கொண்டே செல்லலாம். ஆனால் நான் ஒருவனே சொல்வதைக் காட்டிலும் அவரவர்க்கு தோன்றும்(விரும்பும்) பாடல் வரிகளை எழுதினால் பலரும் இரசிப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

அதனால் இது ஒரு தொடர் பதிவாக இருப்பின் பல நயம் மிகு வரிகள் அனைவரையும் சென்றடையும் என்ற நோக்கத்தோடு எனக்கு தெரிந்த, தெரியாத அனைவரையும் அழைக்கிறேன்.

இதற்க்கு நிபந்தனைகள் எதுவும் இல்லை. வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.

நான்  பதிவுலகிற்கு புதிது என்பதால் எனக்கு வெகு சிலரே பரிட்சயம். இப்பதிவின் மூலம் தொடர நான் அழைப்பது

மதுரை சரவணன்
சபரி
மர்மயோகி
ஜெய்லானி
மங்குனி அமைச்சர்
ஜீவன்சிவம்
SUREஷ்
தேவன் மாயம்
வால் பையன்
ரோஸ்விக்

நண்பர்களே, பதிவை தொடருங்கள். நீங்கள் இரசித்த பாடல் வரிகளை மற்றவரும் இரசிக்கும் வண்ணம் பகிருங்கள்.


நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

22 comments:

  1. நல்ல பாடல் வரிகள்

    ReplyDelete
  2. நல்லா இருக்கு தல.., இப்படி தளத்தில் மட்டும் அழைப்புவிடுத்தால் நிறையப் பேர் நிறைய இடுகைகளில் கவனிக்காமல் போக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது, எனவே அவரவர் தளத்தில் போய் ஒரு அழைப்பு கொடுத்துவிடுங்கள்

    ReplyDelete
  3. சபரி, SUREஷ் (பழனியிலிருந்து)

    வருகைக்கு நன்றி.

    தல.. நீங்க சொன்ன மாதிரியே எல்லோருக்கும் அழைப்பு கொடுத்துவிட்டேன்.

    ReplyDelete
  4. ஓலை கிடைத்தது... வருகிறேன்.....வெற்றியோடு..

    ReplyDelete
  5. அண்ணே! சிக்க வச்சிடிங்களே!

    ReplyDelete
  6. நன்றி ஜெய்லானி.

    //வால்பையன் said...

    அண்ணே! சிக்க வச்சிடிங்களே!//

    ஹி..ஹி.. பட்டைய கிளப்புங்க!

    ReplyDelete
  7. உங்க ஆசையை தீர்தாச்சி!! மக்களை தொடர் கடைசில கூப்புடுகிறேன். நன்றி தலைவா!!!!! பாருங்க http://kjailani.blogspot.com/2010/03/1.html

    ReplyDelete
  8. அழைப்புக்கு நன்றி.தொடருகிறேன்.காலதாமதம் இருப்பின் பொறுத்தருள்க.அருமையானப் பாடல் வரிகள்.

    ReplyDelete
  9. நன்றி மதுரை சரவணன்.

    ReplyDelete
  10. பாடல் வரிகளா? முயல்கிறேன்!!

    ReplyDelete
  11. //'மனதில் ஓசைகள்
    இதழில் மெளனங்கள்
    ஏன் என்று கேளுங்கள்'//.....
    எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!

    நல்ல தேர்வு!

    ReplyDelete
  12. அருமையான வரிகள்...
    காதல் ரசமும் கவிநயமும் சொட்டுகிறது.
    எனை தொடர்பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி நண்பரே...விரைவில் பதிவிடுகிறேன்...

    ReplyDelete
  13. //தேவன் மாயம் said...

    பாடல் வரிகளா? முயல்கிறேன்!!//

    நன்றி தேவன் மாயம்.

    ReplyDelete
  14. நன்றி ஜீவன்சிவம்.

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி Priya

    ReplyDelete
  16. பாலா காதலுக்கு பொய் அழகில்லை நிச்சயமான உண்மை. அழகான விளகத்துடன்கூடிய இடுகை. தொடர்ந்து
    வலையுலகை வலம்
    வாருங்கள் வாழ்த்துக்கள்.

    http://niroodai.blogspot.com/

    ReplyDelete
  17. //பாலா காதலுக்கு பொய் அழகில்லை நிச்சயமான உண்மை.//

    அன்புடன் மலிக்கா வருகைக்கு நன்றி.

    உண்மைதான் தோழி.பொய் கவிதைக்கு மட்டுமே அழகு.

    ReplyDelete
  18. தாமதத்திற்கு மன்னிக்கவும் தல!

    பதிவு போட்டாச்சு!

    ReplyDelete
  19. நல்ல முயற்சி. நானும் ஒரு பாடல் விரும்பி என்பதால் இணைந்து கொள்கிறேன்.
    காதலுக்கு பொய் அழகு இல்லை தோழி.
    நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இந்த நாயகன் சொல்வதை கேளுங்கள்.

    "ஒரு பொய்யாவது சொல் கண்ணே
    உன் காதல் நான் தான் என்று
    அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்" என்கிறான் இவன்.


    நீ காதலிக்கவில்லை என்ற உண்மையோடு வாழ்வதைவிட நீ காதலிக்கிறாய் என்ற பொய்யோடு வாழ்வது சுலபம் என்கிறான் இவன். ஏனென்றால் உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தானே.

    ReplyDelete
  20. https://dheeksha18.blogspot.com/2020/06/blog-post_81.html
    இந்த பாடலின் முழு விமர்சனம் இந்த வலைப்பதிவில் படிக்கவும். நான் 25 பாடல்களுக்கு விமர்சனம் பதிவிட்டு உள்ளேன். பாடல் விரும்பி கள் தொடரவும்.

    ReplyDelete
  21. உலகக் கவிஞர்கள் எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக இந்த பெண்களை மட்டுமே வர்ணிக்கிறார்கள் என்று பொறாமைப் பட்டுக் கொண்டிருந்த ஆண்கள் இந்த வரிகளைக் கேட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்.

    "ஒரு ஆணுக்குள்
    இத்தனை காந்தமா நீயும்
    ஆனந்த பைரவி ராகமா
    இதயம் அலை மேல்
    சருகானதே"
    சொல்லத்தான் நினைக்கிறேன், சொல்லாமல் தவிக்கிறேன்

    இந்த பாடலின் விமர்சனமும் என் வலைப்பதிவில் காண்க.

    ReplyDelete
  22. உலகக் கவிஞர்கள் எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக இந்த பெண்களை மட்டுமே வர்ணிக்கிறார்கள் என்று பொறாமைப் பட்டுக் கொண்டிருந்த ஆண்கள் இந்த வரிகளைக் கேட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்.

    "ஒரு ஆணுக்குள்
    இத்தனை காந்தமா நீயும்
    ஆனந்த பைரவி ராகமா
    இதயம் அலை மேல்
    சருகானதே"
    " சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்"
    இந்த பாடலின் விமர்சனமும் என் வலைப்பதிவில் காண்க.

    ReplyDelete