Monday, March 1, 2010

பதிவுக்கு என்னமாதிரி தலைப்பு வெச்சா நிறைய குத்து வாங்கலாம்

என்னென்னமோ தலைப்ப வெச்சும் நம்ம ஏரியா பக்கம் யாருமே வரமாட்டீன்றாங்கன்னு கவலைப்படற ஆளா நீங்க? அப்படீனா கண்டிப்பா இங்க ஒரு பார்வை பார்த்துட்டு போயிடுங்க. ஏதோ என்னாலான உதவி.

நேத்து பெஞ்ச மழைல இன்னிக்கு மொளச்ச காளான் நமக்கு ஐடியா கொடுக்குது பாருடான்னு அடிக்க வந்தாலும் பரவால்ல 'என் கடன் பணி செய்து கிடப்பதே!' (வ்வ்விடமாட்டேன்).

கீழ்க்கண்ட தலைப்பை வைத்தும் எழுதலாம் அல்லது ஏதாவது எழுதிவிட்டு அதுக்கு இதுல இருந்து ஒரு தலைப்ப எடுத்து வெச்சுடலாம், உங்க இஷ்ட்டம்.


- உண்மைச் சாமியாரும் உன்மத்த நிலையும்

- நேக்ச்பிளியோபோத்தோ கிளியோபாத்ராவிடம் வாங்கிய அடி

- பன்ச் டயலாக்கும் தமிழ் திரையுலகமும்

- திகில் படம் பார்க்கப் போன திடீர் சுமதி

- காதலிய பார்க்க போறப்ப மனைவிய கூட்டிட்டு போகாதீங்க

- மேங்கோ மரத்துக்கு பக்கத்துல ஒரு மாங்கா மரம்

- பெண்ணாதிக்கம் - ஒரு பேரிடி

- 67 மணிநேரம் செலவழித்து எழுதப்பட்ட கட்டுரை

- அரசியல் நோக்கோடு எழுதப்படாத ஒரு அரசியல் கட்டுரை

- அழகான பனியனும் அவுந்துபோன டவுசரும்


இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நா மொத மொதல்ல எழுதுன பதிவுக்கு என்ன தலைப்பு வெச்சிருக்கேன்னு இங்க போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுங்க. அதுனோட பாதிப்புதா இப்படி எல்லாம்.

இந்த மாதிரி தலைப்பு வெச்சு குத்து உங்க பதிவுக்கு பதிலா உங்களுக்கு விழுந்துச்சுன்னா நான் பொறுப்பு இல்லை.

அப்படியே நம்ம பதிவுக்கும் ஒரு குத்து குத்திட்டு போங்க!!

10 comments:

  1. இப்படி ஒரு தலைப்பு வச்சே என்னை இழுத்துட்டியேப்பா!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. ஃபால்லோவர்ஸ் காணோமே!!

    ReplyDelete
  3. இப்ப புரிஞ்சி போச்சி.

    நல்லாயிருக்கு.

    ReplyDelete
  4. தேவன் மாயம், அக்பர்
    வருகைக்கு நன்றி

    தேவன் மாயம்
    என்னங்க பண்றது யாருமே பாலோ பண்ண மாட்டேங்கிறாங்க.
    பாருங்க நீங்களே படிச்சிட்டு பாலோ பண்ணாம போயிடீங்க! ரொம்ப வருத்தமா இருக்குது :(

    ReplyDelete
  5. அட மக்கா.., அனுபவப் பாடம் நிறைய இருக்கும்போல இருக்கே..,

    ReplyDelete
  6. Google Followers widget சேர்த்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  7. SUREஷ், சபரி

    வருகைக்கு நன்றி. Followers widget சேர்த்துவிட்டேன்.

    ReplyDelete
  8. ஒரு கொலவெறியோடதான் திரியறீங்க போல...! சரி... சரி...

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி பரிசல்காரன்

    என்னங்க பண்றது, எல்லாம் உங்களைப் போன்றவர்களின் எழுத்தின் தாக்கம்தான்!

    ReplyDelete
  10. //- அழகான பனியனும் அவுந்துபோன டவுசரும்//

    ம்ம்ஹூம். இது சரியில்லை.

    கொல்லைப் பக்கத்து பிராவும், கொடியில் ஆடும் பாண்டீசும் ன்னு சொல்லியிருந்தா ஒத்துகிட்டு இருப்பேன்.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete