Wednesday, March 24, 2010

கல்யாணம் ஆனவங்க இதை கண்டிப்பா படிங்க

பேச்சுலர்ஸ் அப்படின்னாலே எதோ  தெனைக்கும் தண்ணி அடிக்கிறவங்க, எங்க பொண்ணுகளைப் பாத்தாலும் உடனே ஓடிப் போய் கையப் புடிச்சு இழுத்துருவாங்க அப்படிங்கற அளவிலேயே பாக்கறீங்களே!. நாலு பசங்க ஒன்னா சேர்ந்து தங்கினாலே அவங்கள ஏதோ தீவிரவாதியப் பாக்கிற மாதிரிதானே பாக்கிறீங்க.

பேச்சுலர்ஸ் போய் வீடு வேணும்னு  கேட்டா வீட்டுக்காரங்க ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க, அடுத்த பேச்சுக்கு இடமே இல்லாம திரும்பி நடக்க வேண்டிய பார்வை அது.

அப்படியே வீடு கொடுத்தாலும் அந்த பசங்க மேல ஒரு கண்ணுவெச்சுகிட்டே இருப்பாங்க.

இந்த நிலைமையில ஒரு பேச்சுலர் எந்த தப்பும் பண்ணாம பக்கத்து வீட்டு பொண்ண டாவடிச்சதா அவன் மேல ஒரு குற்றம் சுமத்தப் படுது. அப்போ அவன அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாம் சுத்தி நின்னு கேள்வி மேல கேள்வியா கேக்கிறாங்க.

அந்த சூழ்நிலைய பத்தி மாட்டிக்கிட்ட பையன் மனம் வெறுத்து சொல்றதுதான் கீழ்க்கண்ட தொடர்ச்சி.

---------------------------------------------------------------

கண்மூடி நிதானித்து பதிலுரைக்க காலம் தாழ்த்திய இடைவெளியை நிரப்பும் பொருட்டு எழுந்த பேச்சுக்கள் மனதின் திண்மையை ஆட்டிப் பார்க்கினும் நிதானம் இழக்காமல் நிற்பவனின் பொறுமையை சோதனைச் சாலை எலி என நினைப்பவர்களை மன்னிக்கும் மகாத்மா அல்ல நான்.

நீங்களும்  இதற்க்கு ஒரு நாள் ஆட்படின் செய்வதறியாது நிலைகுலைந்து சூடேறும் இரத்தத்தை ருசிக்கும் ஓநாய் கூட்டத்தின் வம்சம் அல்ல நான்.

தன் சுற்றம் அல்லாத பெண்ணை கண்டு பேருவக்கும் செயல்தனை புறம்  ஒதுக்கும் சொற்ப மனிதர்களை அற்பமாய் பார்க்கும் ஈனம் என்னுள் குடிவர அனுமதித்ததில்லை.

தனித்திருப்பினும் தனக்கான கொள்கையினை பிறர்க்கென தளர்திக்கொள்ளும் மனிதர்களை தன்னோடு இணைத்துக்கொள்ளும் தாழ்ந்தவன் அல்ல நான்.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்னும் கூற்றிக்கு பக்கம் நின்று கூக்குரலிடும் தன்மையினை எனக்குள்ளே வளர்த்துக் கொண்டவன் நான்.

அயல்நாட்டு மோகத்தின் பால் ஈர்ப்பு கொண்டு என்னையன் வள்ளுவன் கூறிச்சென்ற பிறன்மனை நோக்காப் பேராண்மை என்னும் முதுமொழியினை தகர்க்கும் கூட்டத்தில் சேர்ந்திட்டேன் அல்லன் நான்.

இப்படிப்  பலவாறு எடுத்துரைத்தும் உரைத்த கருத்தினை கண்டுகொள்ளாது தன் இருப்பை காட்டிக் கொள்ள முயலும் கூட்டத்தினுள் மாட்டிகொண்ட கதைகளத்தின் கருப்பொருள் நான்.

 ---------------------------------------------------------------

என்னங்க, இவனுக்கு என்னமோ ஆயிடுச்சுன்னு பரிதாபமா பாக்கிறது புரியுது.
ஏதோ புதுசா முயற்சி செஞ்சு பாக்கலாமுன்னுதான் இப்படி. நீங்க எதையும் மனசில் வெச்சுகாதிங்க.


நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 


-

9 comments:

 1. யாருங்க அந்த பையன் பாவம் ? ;)

  ReplyDelete
 2. நல்லவேளை எனக்கு கல்யாணம் ஆயிடிச்சி

  ReplyDelete
 3. //Sabarinathan Arthanari said...
  யாருங்க அந்த பையன் பாவம் ? ;)//

  நிச்சயமா நா இல்லீங்க...

  ReplyDelete
 4. //Mahesh said...

  நல்லவேளை எனக்கு கல்யாணம் ஆயிடிச்சி//

  ம்ம்ம்... தப்பிச்சுடீங்க!

  நிறைய பேரு வராங்க ஆனா கருத்து எதுவும் சொல்ல மாடிங்கிறாங்க. ஒரு வேளை நம்ம மேல கொலை வெறியோட இருக்காங்களோ!!??

  ReplyDelete
 5. //என்னங்க, இவனுக்கு என்னமோ ஆயிடுச்சுன்னு பரிதாபமா பாக்கிறது புரியுது.
  ஏதோ புதுசா முயற்சி செஞ்சு பாக்கலாமுன்னுதான் இப்படி. நீங்க எதையும் மனசில் வெச்சுகாதிங்க.//

  ஏன் இந்த கோல வெறி,
  பாலமுருகன் நல்லாருக்கு தொடருங்கோ

  ReplyDelete
 6. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மங்குனி அமைச்சரே.

  ReplyDelete
 7. முற்றுப்புள்ளி வைக்காமல் முப்பது வார்த்தைகள்.
  பல்லுடைக்கும் பழந்தமிழ் வார்த்தைகள்.
  நல்லாத்தங்க இருக்கு உங்க நடை.
  தொடரட்டும் வாழ்த்துக்கள்.
  வெண்புரவி

  ReplyDelete
 8. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி Aruna

  ReplyDelete