20-20 கிரிகெட் ஆரம்பித்து விட்டது, இனி உயிரே போனாலும் மேட்ச் பார்க்காமல் இருக்க முடியாது. அதென்னவோ தெரியலைங்க இந்த கிரிகெட் மட்டும் ஆரம்பிச்சுட்டா பக்கத்தில உக்காந்திருக்கிறது பொண்டாட்டியா இல்ல அவ சக்கலத்தியான்னு கூட தெரியறது இல்ல. என்ன கருமாந்திரம் புடிச்ச விளையாட்டோ!
கிரிகெட் பாக்கிற ஒவ்வொரு ஆளையும் புடிச்சு உங்க அம்மா அப்பாவோட பிறந்த தேதி என்னன்னு கேட்டா எத்தன பேரு விட்டத்த பாப்பாங்கன்னு தெரியல. ஆனா 2005 ல டெண்டுல்கர் எத்தன ரன்னுன்னு கேட்டா மூச்சு விடாம அத பத்தி அரை மணி நேரம் பேசுவாங்க.
சரி விடுங்க இத பத்தி அதிகம் பேசாம இருக்கிறது ரொம்ப நல்லது. நா எனக்கு சொன்னே!
------------------------------------------------------------------
"ச்சே, என்ன கொடும மச்சி இது. காலைல ஆபீஸ் வந்தா யாருமே ஒழுக்கமா வேலையைப் பாக்கிறது கிடையாது. பக்கத்து ஆளுகிட்ட நாயம், கிளுகிளுப்பான படத்தோட ஈமெயில் ஏதாவது வந்திருக்குதான்னு பாக்கிறது, இன்னைக்கு யார் யாரு என்னென்ன டிரஸ் போட்டிருக்காங்கன்னு அப்படியே ஒரு நோட்டம். மொத்தத்துல இவங்க எல்லாம் வேலையே செய்ய மாட்டங்க போல இருக்குது."
"ம்"
"இப்போ மணி பன்னிரண்டு, பத்து மணிக்கு வந்த ஆளுங்க இதுவரைக்கும் வேலைய ஆரம்பிக்கல. நம்ம ஒன்னும் உழைச்சு ஓடா தேய வேணாம், எதோ கொடுக்கிற சம்பலத்துக்காகவாவது வேலை செய்யனுமில்ல?"
"ம்"
"இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பட்ட கொட்டிக்க கிளம்பிருவாங்க"
"வாய் கிழிய பேசுறியே காலைல இருந்து நீ என்ன பண்ணுனே?"
"வந்ததிலிருந்து எப்படி எப்படியோ பிட்டப் போட்டும் அந்தப் பொண்ணு மடங்க மாட்டேங்குது மச்சி. ஏதாவது செய்யணும் மச்சி!"
!!!???
------------------------------------------------------------------
ஒரு சின்ன கவிதை
மற்றவர்கள் முன்
என்னிடம் பிச்சை கேட்கும் சிறுவன்
மதில்மேல் பூனையாய்
மனது
------------------------------------------------------------------
(அதிரும்...)
ஒரு ஓட்ட குத்திட்டு அப்படியே நம்மள பாலோ பண்ணுங்க!
-
//"வந்ததிலிருந்து எப்படி எப்படியோ பிட்டப் போட்டும் அந்தப் பொண்ணு மடங்க மாட்டேங்குது மச்சி. ஏதாவது செய்யணும் மச்சி!"//
ReplyDeleteகடலை போடுங்க பாஸ் ;)
//சரி விடுங்க இத பத்தி அதிகம் பேசாம இருக்கிறது ரொம்ப நல்லது. நா எனக்கு சொன்னே!//
ReplyDeleteஅது
//கடலை போடுங்க பாஸ் ;)//
ReplyDeleteகிடைச்சா மாட்டேன்னா சொல்றேன்.... கிடைக்க மாட்டேங்குதே பாஸ்.