Friday, March 19, 2010

அதிர்வுகள் - 2 (யு.டி.வி. பிந்தாஸ் - ஒரு அதிர்ச்சி தகவல் )

நண்பர்களே, நேற்று இரவு எதேச்சையாக "யு.டி.வி. பிந்தாஸ்" என்ற சேனல் பார்க்க நேர்ந்தது. அதில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சி 'இமோசனல் அத்யாசார்'. காதலர்களுக்கு இடையே உள்ள காதலை பரிசோதிக்கும் ஒரு நிகழ்ச்சி.

"ஒரு காதலனோ அல்லது காதலியோ தன் காதலன்/காதலி மீது சந்தேகம் கொள்ளும் பட்சத்தில், இந்த நிகழ்ச்சியின் மூலம் தெளிவு படுத்திக்கொள்ளலாம்".

அதாவது, காதலிக்கும் ஒரு பெண்ணிற்கு தன் காதலன் மீது சந்தேகம் வந்தால் இந்த நிகழ்ச்சி தொடர்பாளரை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள், தாங்கள் நியமித்த பெண்ணின்/ஆணின்  மூலம் அந்த காதலரை சந்திக்கச் செய்வர். இதில் பெரும்பாலும் சந்தேகம் கொள்ளும் நபர் பெண்ணாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மையை  உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஒரு பெண் தன் காதலனின் மீது சந்தேகம் கொண்டோ அல்லது ஒரு விளையாட்டாகவோ இந்த நிகழ்ச்சியின் மூலம் தொடர்பு கொண்டு சோதிக்க விரும்புகிறாள். முதலில் அந்த சேனல் நியமித்த பெண் அந்த வாலிபரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பூங்கா, ஷாப்பிங் மால் (படுக்கை அறை வரை கூட) என்று ஏதாவது ஒரு இடத்திற்கு வரச் செய்கின்றனர்.  பின்பு மெல்ல மெல்ல பேச்சு கொடுத்து, தன் அழகை பிரதானமாகக் கொண்டு தன்பால் ஈர்க்கின்றார் அந்தப் பெண்.

அதை உண்மை என்று நம்பும் அந்த வாலிபர் அப்பெண்ணின் பேச்சிற்கு இணங்க அவள் கூப்பிட்ட இடத்திற்கு செல்ல முனைகிறார். இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன், எந்த ஒரு மனிதனையும் தன் வசம் இழக்க வைப்பது சூழ்நிலையே. ஏற்க மறுத்தாலும் நாம் எல்லோரும் சூழ்நிலை கைதிகள் என்பது மறுக்க முடியாதது.

பெண்ணின் பேச்சு மற்றும் செய்கை அந்த வாலிபரின் உணர்சிகளை தூண்டுவதாகவே இருக்கும் (அந்த வாலிபரை மட்டும் அல்ல யாராய் இருப்பினும்). அவரும் தன்னிலை மறந்து சில்மிசங்களில் ஈடுபட ஆரம்பிப்பார். இதை அனைத்தும் மறைந்திருந்து கேமிரா மூலம் பத்தி செய்வார்கள். அது மட்டுமில்லாமல் இதை நேரடி ஒளிபரப்பாக அந்த பையனை காதலிக்கும் பெண்ணிற்கும் காண்பிப்பார்கள்.

இதை பார்த்துக்கொண்டிருக்கும் பெண் தன் காதலன் இன்னொரு பெண்ணிடம் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து கோபம் கொள்வாள். அதுமட்டுமில்லாமல் தன் காதலனும் அந்தச் சேனலால் நியமிக்கப்பட்ட பெண்ணும் ஒன்றாக இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப் படுவாள்.

திடீரென்று முளைத்த கேமிரா மற்றும் ஆட்களைப் பார்த்து அந்த பையன் அதிர்ச்சி அடைவான். இவ்வாறு ஒரு சூழ்நிலையில் மாட்டிகொண்டோமே என்ற படபடப்பில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் உணர்ச்சி மேலீட்டில் செயல்படத் துவங்குவான்.  அப்பொழுது அந்த பெண் மற்றும் காதலன் எவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்றும் பதிவு செய்வார்கள்.


ஒரு காதலர்களுக்கு இடையே செயற்கையான நிகழ்வின் மூலம் பிரிவை ஏற்படுத்தி அவர்களுக்குள் என்ன மாதிரியான வாக்குவாதம் நடைபெறுகிறது என்று பதிவு செய்யப்படுகிறது.


பின்பு அதை தங்களின் 'இமோசனல் அத்யாசார்' நிகழ்ச்சியின் மூலம் ஒளிபரப்புவார்கள். இது அந்த சேனலின் டி.ஆர்.பி. ரேட்டை உயர்த்திக்கொள்ள உதவும் ஒரு வியாபாரத்தந்திரம். அவர்களின் வியாபாரத்திற்க்காக ஒரு காதலர்களின் காதலை கேலிக்கூத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.



இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்ப இந்தியச் சட்டம் எவ்வாறு அனுமதிக்கிறது. இதற்க்கு சட்டவியலில் தடை செய்ய எந்த ஒரு பிரிவும் இல்லையா?.


இதில் காதலனோ காதலியோ அவர்களுக்குள் இருக்கும் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள, ஒரு நபர் இப்படிப்பட்ட பொது ஊடகத்தை தேர்ந்தெடுத்தாலும் அதில் சம்பத்தப்பட்ட அடுத்த நபரின் அனுமதி இல்லாமல் அவர் வேண்டாம் என்று மறுத்த பின்பும் டி.வி.யில் ஒளிபரப்புவது அடாவடித்தனமில்லையா?.


இவ்வாறான நிகழ்ச்சிகளைப் பார்த்து அதை ஊக்குவிக்கும் நபர்கள் இருக்கும் வரை இது போன்ற சேனல்களுக்கு கொண்டாட்டம்தான்.

ஒரு நடன நிகழ்ச்சியின் மூலம் நடனக் கலையை ஊக்குவிக்கலாம், பாட்டு போட்டி நடத்துவதன் மூலம் இளம் பாடகர்களின் திறமையை வெளிச்சமிட்டு காட்டலாம். இது போன்று எத்தனையோ ஆக்கப் பூர்வமான நிகழ்ச்சிகள் இருப்பினும், இது போன்றதொரு நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு என்ன மாதிரியான பயன் கிடைக்கும் என்று தெரியவில்லை.


அதுமட்டுமில்லாது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காதலர்கள் அதன் பின்பு என்ன மாதிரியான முடிவு எடுக்கிறார்கள் என்பதை பற்றி யாரும் யோசிப்பதாய் தெரியவில்லை.


இது பற்றி தங்களின் கருத்தை பதிவு செய்யவும்.

--------------------------------------------------------------------

திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி

நான் கேட்டுக்கொண்டதர்க்காக என் பதிவுகளைப் படித்து நிறை குறைகளை சுட்டிக் காட்டியதோடு ஆலோசனையும் வழங்கிய திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

--------------------------------------------------------------------

ஒரு சின்ன கவிதை

காதலும் காற்றும் ஒன்றா
ஆம் என்கிறது
என் சுவாசம்

--------------------------------------------------------------------

(அதிரும்...)

பிடிச்சிருந்தா ஒரு ஒட்டு குத்திட்டு அப்படியே நம்மள பாலோ பண்ணுங்க!

-

16 comments:

  1. //வியாபாரத்திற்க்காக ஒரு காதலர்களின் காதலை கேலிக்கூத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.//

    இது என்ன பெரிய விசயம் பணம் கிடைக்கும் என்றால் ப்ளு பிலிம் கூட காட்டுவார்கள். ?? (உதா: நக்கீரன், சன்)

    ReplyDelete
  2. //பெண்ணின் பேச்சு மற்றும் செய்கை அந்த வாலிபரின் உணர்சிகளை தூண்டுவதாகவே இருக்கும்//

    இப்பா மாமா வேலையும் கூடவா ?? (என்ன கொடுமை சார் இது !)

    ReplyDelete
  3. //சம்பத்தப்பட்ட அடுத்த நபரின் அனுமதி இல்லாமல் அவர் வேண்டாம் என்று மறுத்த பின்பும் டி.வி.யில் ஒளிபரப்புவது அடாவடித்தனமில்லையா?//

    அடாவடித்தனமா ? அதற்கு பெயர் ஊடக சுதந்திரம் !!

    ReplyDelete
  4. //சட்டவியலில் தடை செய்ய எந்த ஒரு பிரிவும் இல்லையா?.//

    அடுத்தவர்களிடம் இந்த மாதிரி சோதணை செய்யும் மன நோயாளி ஆட்களுக்கு சரியான தண்டனை அவர்களின் குடும்பத்தினருக்கு இடையே இதே மாதிரியான சோதணை செய்வது தான்.

    ReplyDelete
  5. சபலத்திற்கு ஆட்படுவது தனிப்பட்ட மனிதர், இடம், பொருள், சூழ்நிலை இவற்றை பொருத்தது.

    இதற்கு காதலன், காதலி என்று மட்டும் தேவையில்லை. வயதிற்கு வந்த யாவருக்கும் செய்யலாம்.

    எனவே முற்போக்கு நிகழ்ச்சி நடத்தும் இந்த மாதிரி ஆட்கள் தன்னையோ தனக்கு நெருங்கியவர்களையோ இப்படி சோதணை செய்ய முன்வருவார்களா ???

    ReplyDelete
  6. //இது என்ன பெரிய விசயம் பணம் கிடைக்கும் என்றால் ப்ளு பிலிம் கூட காட்டுவார்கள். ?? (உதா: நக்கீரன், சன்)//

    எல்லா ஊடகமும் இதையே பின்பற்றாமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  7. //இப்பா மாமா வேலையும் கூடவா ?? (என்ன கொடுமை சார் இது !)//

    அந்த சேனல் லேபில் போட்ட மாருதி வேன் பார்த்தா விட்டுடாதிங்க, அமுக்குங்க.

    ReplyDelete
  8. //'இமோசனல் அத்யாசார்'. //

    ஏம்பா நல்ல ப்ரோக்ராமாதானே இருக்கு, பேசாம நீயே ஒரு ராங்க கால் குடுத்து அவுக அனுப்புற பிகரோட சும்மா ஒருவாரம் பிரீயா என்ஜாய் பண்றத விட்டுட்டு ...... (அந்த ப்ரோக்ராம் போன் நம்பர் இருந்தா கொஞ்சம் கொடேன் )

    ReplyDelete
  9. //அடாவடித்தனமா ? அதற்கு பெயர் ஊடக சுதந்திரம் !!//

    ஊடக (சு)தந்திரம்

    ReplyDelete
  10. //ஏம்பா நல்ல ப்ரோக்ராமாதானே இருக்கு, பேசாம நீயே ஒரு ராங்க கால் குடுத்து அவுக அனுப்புற பிகரோட சும்மா ஒருவாரம் பிரீயா என்ஜாய் பண்றத விட்டுட்டு ...... (அந்த ப்ரோக்ராம் போன் நம்பர் இருந்தா கொஞ்சம் கொடேன் )//

    வாங்க அமைச்சரே,

    இதுக்குத்தான் நாட்டுக்கு ஒரு மங்குனி அமைச்சர் வேணும்கிறது. நா மட்டும் என்ஜாய் பண்ணா பரவால்லையே. மொத்த ஊருக்கும் படம் போட்டு காட்டி விடுவார்கள். நாளைய சரித்திரம் நம்மை தவறாக சித்தரித்து விடாதா.
    வரலாறு முக்கியம் அமைச்சரே.

    ReplyDelete
  11. //எனவே முற்போக்கு நிகழ்ச்சி நடத்தும் இந்த மாதிரி ஆட்கள்//

    இதுக்குப் பேருதான் முற்போக்கு நிகழ்ச்சியோ!!

    ReplyDelete
  12. முற்போக்குன்னு சொல்லி எதை காட்டினாலும் இப்ப தப்பி விடலாம் இல்ல? ஐடியா.. ஐடியா..

    ReplyDelete
  13. (சு)தந்திரம்
    தந்திரம்
    திரம்
    ரம்
    ம்..ம்..

    ReplyDelete
  14. //அந்த சேனல் லேபில் போட்ட மாருதி வேன் பார்த்தா விட்டுடாதிங்க, அமுக்குங்க.//

    ஆமா விட்டுடாதிங்க, அமுக்குங்க

    ReplyDelete
  15. //இதுக்குத்தான் நாட்டுக்கு ஒரு மங்குனி அமைச்சர் வேணும்கிறது. நா மட்டும் என்ஜாய் பண்ணா பரவால்லையே. மொத்த ஊருக்கும் படம் போட்டு காட்டி விடுவார்கள். நாளைய சரித்திரம் நம்மை தவறாக சித்தரித்து விடாதா.
    வரலாறு முக்கியம் அமைச்சரே.//

    ஆகா உலகம் புரியாதவனா இருக்கியே , அது தான்யா இப்ப பப்ளிசிட்டிக்கு புது ட்ரெண்டு , கிராபிக்ஸுன்னு சொல்லிடலாம்பா

    ReplyDelete
  16. //மங்குனி அமைச்சர் said...

    ஆகா உலகம் புரியாதவனா இருக்கியே , அது தான்யா இப்ப பப்ளிசிட்டிக்கு புது ட்ரெண்டு , கிராபிக்ஸுன்னு சொல்லிடலாம்பா//

    ரைட்டு,

    பப்ளிசிட்டிக்கு நான் ரெடி.
    ஸ்டார்ட் மீஸிக்.....

    ReplyDelete