Saturday, April 3, 2010

நான் வேறு எதுவாகவேணும் பிறந்திருக்கலாம்!

நான் நானாய் பிறந்ததற்குப் பதில்
வேறு எதுவாகவேணும் பிறந்திருக்கலாம்.

ஒரு பறவையாய்
கல்லாய்
மரமாய்
காகிதமாய்

ஆனால்...

பறவையாய் இருப்பின்
மாமிச பட்சிணிகளால்
அகோரமாய் அடித்து உண்ணப்படலாம்

கல்லாய் இருப்பின்
கலவரத்தில் யாரோ ஒருவரின்
மண்டையப் பிளக்க
உபயோகப் படுத்தப் படலாம்

மரமாய் இருப்பின்
பற்றி எறியும் தீ நாக்குகள்
சிறு குழந்தைகளின்
தசையை தீண்ட
காரணமாய் இருந்து விடலாம்

காகிதமாய் இருப்பின்
ஏதோ ஒரு ஊரின், நாட்டின்
நாட்டு மக்களின்
கருப்பு பக்கங்களைப் பற்றி
எழுத பயன்படுத்தப் படலாம்

இப்படி வேறு எதுவாக பிறப்பினும்
அதிலும் சில சங்கடங்கள்
இருப்பது கண்டு
நான் நானாக பிறந்ததர்க்கே
மகிழ்வுறுகிறேன்.


நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

6 comments:

  1. அருமை.நான் நானாக இருப்பதிலே தான் சந்தோசம் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //நான் நானாக பிறந்ததர்க்கே
    மகிழ்வுறுகிறேன்.//

    சரிதாங்க

    ReplyDelete
  3. Madurai சரவணன்
    சபரி

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  4. எல்லாம் தெளிவா தான்யா யோசிகிரானுக, டே மங்கு உனக்கு எப்பையாவது இப்படி தொநிருக்கா ?

    ReplyDelete
  5. வாங்க மங்குனி அமைச்சர்,

    என்னத்த்த்த யோசிச்சு.... !!!

    ReplyDelete