ஒவ்வொரு நாளும் ஏதாவது

Posted by : Balamurugan | Tuesday, April 27, 2010 | Published in

ஒவ்வொரு நாளும்
ஏதாவது ஒன்றை சந்திக்க வேண்டி இருக்கிறது

ஏன் என் வாழ்கையில்
இவையெல்லாம் நடந்தேறுகிறது.

கொஞ்சம் மகிழ்ச்சி
கொஞ்சம் சோகம்
கொஞ்சம் பிரச்சனை
கொஞ்சம் தனிமை

சில நேர அமைதி
சட்டென்று பொங்கும் கோபம்

நண்பனின் துரோகம்
சிறு புன்னகை
துளிர்க்கும் கண்ணீர்
வெறுக்கும் சுற்றம்
நீளும் நட்புக் கரம்

முரண் எண்ணங்கள்
ஈர்க்கப்படும் கவனம்
கூடா நட்பு
தெளிந்த மனது

தவிர்க்க முடியா ஆசை
தீராத தேடல்
முடிவில்லா பயணம்
எதிர்கொள்ளும் ஏமாற்றம்

புறம் பேசும் குணம்
விரும்பத்தகாத நிகழ்வு
கேட்கப் படும் உதவி
எதிர்பாரா அதிர்ச்சி

ஏன் என் வாழ்கையில்
இவையெல்லாம் நடந்தேறுகிறது

ஆனாலும்,
இது எதுவும் இல்லாவிட்டால்
அது வாழ்க்கையாகவும் இருக்காது..

-
நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 

 -
 

(4) Comments

  1. Sabarinathan Arthanari said...

    //இது எதுவும் இல்லாவிட்டால்
    அது வாழ்க்கையாகவும் இருக்காது..//

    அது...

    April 27, 2010 12:01 PM
  2. பாலமுருகன் said...

    நன்றி சபரி

    April 27, 2010 12:50 PM
  3. மின்னல் said...

    //இது எதுவும் இல்லாவிட்டால் அது வாழ்க்கையாக இருக்காது//

    வரிகள் நல்லா இருக்கு பாலமுருகன் .வாழ்த்துகள்

    April 28, 2010 2:41 PM
  4. பாலமுருகன் said...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மின்னல்.

    April 29, 2010 10:19 AM

Leave a Response