ஆசைப்பட்டு கேட்ட பொம்மை
கைக்கு கிடைக்காமல்
அதோ பாரு
யாரு வர்றாங்கன்னு
என்று சொல்லி
திசை திருப்பப் படுவதர்க்காகவா
பக்கத்து வீட்டு
பையனைப் போல்
துணி வேண்டும் என்று கேட்டதர்ற்கு
அது ஆயி என்று சொல்லி
கவனம் கவரப்படுவதர்க்காகவா
மிதிவண்டி இருந்தால் தான்
பள்ளிக்கு செல்வேன் என்று சொல்லி
அடம் பிடித்ததற்காக
மிதி வாங்குவதர்க்காகவா
பள்ளிப் படிப்பை தாண்டி
கல்லூரி செல்ல
வசதி இல்லாததை நினைத்து
கண்ணீர் வடிக்கவா
இளமை காலம் தாண்டியும்
பொருளாதாரம் நிமித்தமாக
எதிர் பார்த்த நேரத்தில்
ஆகாத கல்யாணத்தை நினைத்து
மனம் வாடவா
தாமதமாய் அமைந்த மனைவி
எதிர்பார்ப்பை நிறைவு
செய்யாதது கண்டு
மனம் புளுங்கவா
பெற்ற மக்களை
என் பால்யம் போல் அல்லாமல்
வசதியாய் வாழ வைக்க
முடியாததை நினைத்து
சுவற்றில் முட்டிக் கொள்ளவா
அல்லது என் வாழ்க்கை போலவே
எனது பிள்ளைகளின் வாழ்க்கை
மறு சுழற்சியாய்
அமைந்து விட்டதை நினத்து
மனம் புளுங்கவா
எதற்காக இந்த வாழ்க்கை!
-
நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.
-
:)
ReplyDeleteவருகைக்கு நன்றி elango
ReplyDelete//எதற்காக இந்த வாழ்க்கை!//
ReplyDeleteஇவை ஏதும் நடக்காமல் இருப்பதற்காகவோ ?!
//Sabarinathan Arthanari said...
ReplyDelete//எதற்காக இந்த வாழ்க்கை!//
இவை ஏதும் நடக்காமல் இருப்பதற்காகவோ ?!//
அப்படி இருந்தால் நன்று.