பேருந்து நிறுத்தத்தில்
உன்முகம் என்னுள் பதிந்து போனது
மறுமுறை காண்பேனா...
விடை தெரியாது...
விடை தெரியா கேள்விக்கு
விளக்க உரையாய்
வந்து சேர்ந்தாய்
எனது அலுவலகத்திற்க்கே
நீ வந்ததில் இருந்து
என் வேலை நாட்களில்
விடுப்பு என்பதே இல்லாமல்
பதிவு செய்து கொண்டது
என் அலுவலக
வருகை பதிவேடு
எதிரில் இருந்த
கணினி திரையை
மறைத்தது உன் பிம்பம்
என் எண்ணத்தில்
என் எண்ணத்தை
ஊடறுத்த உன் பிம்பத்தை
காண சுற்றி அலைந்தேன்
இதுவரை அறிந்திராத
அலுவலக இடுக்குகளிலும்
கண்டு கொண்டேன்
நீ இருக்கும் இடத்தை
அதோடு என் வேலை மறந்தேன்
என்னை மறந்தேன்
நீ அலுவலகம் வரும் நேரம்
நானும் வந்தேன்
நீ உணவருந்தும் வேளை
நானும் அருந்தினேன்
நீ விடுப்பில் இருந்தால்
நான் நெருப்பில் இருந்தேன்
வாரத்தில் ஏழு நாட்களும்
வேலை செய்யா அலுவலகத்தை
மனதுள் திட்டினேன்
காரணமின்றி உன் இருப்பிடத்தை
ஒவ்வொரு நாளும்
பலமுறை கடந்தேன்
அதற்க்கான காரணம் உனக்கு தெரித்திருக்க
நியாயம் இல்லை
ஏனெனில் நீ இதுவரை
என்னை பார்த்ததில்லை
நினைத்திருந்தேன்
வாழ் நாளின் ஆகச் சிறந்த
தருணங்கள்
கவிதைகள் என்னை ஆட்கொண்ட
நேரமென்று
அதை பொய்யாக்கிச் சென்றது
உன் பெயரை தெரிந்து கொண்ட பொழுது.
-
நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.
-
//வாரத்தில் ஏழு நாட்களும்
ReplyDeleteவேலை செய்யா அலுவலகத்தை
மனதுள் திட்டினேன்//
இது நம்ம மக்களுக்கு தெரியுமா ?
[கொலை வெறியோடு வேலை செய்வோர் சங்கம்]
//என் அலுவலக
ReplyDeleteவருகை பதிவேடு//
ரைட்டு
என்னத்தை = எண்ணத்தை
ReplyDelete//Sabarinathan Arthanari said...
ReplyDelete//வாரத்தில் ஏழு நாட்களும்
வேலை செய்யா அலுவலகத்தை
மனதுள் திட்டினேன்//
இது நம்ம மக்களுக்கு தெரியுமா ?
[கொலை வெறியோடு வேலை செய்வோர் சங்கம்]
//
தெரிஞ்சா கொல்ல வருவாங்க....!
//Sabarinathan Arthanari said...
ReplyDeleteஎன்னத்தை = எண்ணத்தை//
திருத்தம் செய்து விட்டேன். நன்றி.
கடசிவர பேரு சொல்லவே இல்ல... யாருன்னு தெரியமா போச்சே..
ReplyDeleteநல்ல கவிதை... ரசித்தேன்...
ReplyDelete//Mahesh said...
ReplyDeleteகடசிவர பேரு சொல்லவே இல்ல... யாருன்னு தெரியமா போச்சே..//
நேரம் வரும் போது கண்டிப்பா சொல்றேங்க.
:D
நன்றி க.பாலாசி
ReplyDeleteஅநியாயத்துக்கு நல்லவனா இருக்கியே ?
ReplyDeleteசரி, சரி , அந்த காலேஜ் மேட்டர் இந்த பொண்ணுக்கு தெரியுமா ?
//மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteஅநியாயத்துக்கு நல்லவனா இருக்கியே ?
சரி, சரி , அந்த காலேஜ் மேட்டர் இந்த பொண்ணுக்கு தெரியுமா ?
//
ஐயோ மங்கு மங்கு,
இதை எல்லம்மா போய் அந்த பொண்ணுகிட்ட சொல்லுவாங்க.
எப்பவுமே ஒன்னோட இன்னொண்ண போட்டு குழப்பிக்கக் கூடாது.