நீல நிற குதிரை ஒன்று
அழகு காட்டி நின்றது
என் விருப்பம் கேட்காமலே
என்னை ஏற்றிக் கொண்டு
நடக்கத் தொடங்கியது
ஏறியது குதிரை என்று தெரியாமலே
துவங்கியதென் பயணம்
ஏறிய குதிரையின் சூட்சுமம் புரிவதர்க்குள்
பயண தூரத்தின்
கால் பங்கை கடந்திருதேன்
அப்போதும் சூட்சமம் மட்டுமே புரிந்திருந்தது
பிரயாணத்தின் பாதை புரியவில்லை
எனது பாதையில் குறுக்கும்
நெடுக்குமாக பல குதிரைகள்
அலைந்து கொண்டிருந்தன
சில குதிரைகள்
என்னை இடறிச் சென்றன
சில என்னை
உடன் அழைத்துச் சென்றன
எனக்கு என் குதிரையில்
பயணிக்க பிடிக்கவேயில்லை
மற்ற குதிரைகள் என்னை வசீகரித்தன
இருந்தபோதும் நான் பயணிப்பதை
நிறுத்தவே இல்லை
ஒரு கட்டத்தில் எனது குதிரை
துள்ளலுடன் பயணிக்க ஆரம்பித்தது
எனது பாதை மறந்து
குதிரை சில நேரம்
சிலிர்த்துக் கொன்டது
தாகத்தில் அலைந்தது
வெறி கொண்டு ஓடியது
மாறிய பாதையை
மாற்ற முடியவில்லை
நிதானித்த பின்பு
கிடைத்த பாதையில்
தொற்றிக் கொண்டன
சுமைகளும்
சுகமாய் இருந்த சுமைகள்
நடக்க நடக்க
எரிச்சலூட்டின
உதற நினைத்தாலும்
சுமைகள் குதிரையை
விடுவதாய் இல்லை
சுமைகளாலும்
நெடுந்தூர பயனத்தாலும்
இதோ எனது குதிரை
களைத்து விட்டது
தனது பயணத்தை
முடித்துக் கொள்ள
விரும்புகிறது
நானும் இறங்கிக் கொள்கிறேன்
அடுத்த குதிரையில் எனது
பயணத்தை எதிர்நோக்கி!
நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.
-
நீங்களும் பயணத்தை பற்றிய இடுகையா ரைட்டு
ReplyDelete//Sabarinathan Arthanari said...
ReplyDeleteநீங்களும் பயணத்தை பற்றிய இடுகையா ரைட்டு//
பயணங்கள் இல்லாமல் வாழக்கை இல்லை :)
குதிரை எதுன்னு கொஞ்சம் கொழப்பமா இருக்கு பாலமுருகன்
ReplyDelete//மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteகுதிரை எதுன்னு கொஞ்சம் கொழப்பமா இருக்கு பாலமுருகன்//
வாழ்க்கையைத்தான் குதிரையாக சித்தரித்துள்ளேன் அமைச்சரே.
கரக்ட் கரக்ட் இப்ப புரியுது (நான் கொஞ்சம் ட்யுப் லைட் )
ReplyDeleteஎனக்கு விருதா!
ReplyDeleteஇதோ வருகிறேன்.
//மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteகரக்ட் கரக்ட் இப்ப புரியுது (நான் கொஞ்சம் ட்யுப் லைட் )//
ஆனா 'ட்யுப் லைட்' பிக்கப் ஆயிடுச்சுன்னா ரொம்ப பிரகாசமா இருக்கும் அமைச்சரே.