தலைப்பைப் பார்த்து படிக்கப் படும் பதிவுகள்.

Posted by : Balamurugan | Monday, April 19, 2010 | Published in

தலைப்பைப் பார்த்து படிக்கப் படும் பதிவுகள்.

எல்லோரும் பதிவு எழுதுகிறார்கள்
கவிதை அனுபவம் நகைச்சுவை என்று

ஆனால்  எழுதப்படும்
கரு சுற்றி வருகிறது

சுய கற்பனை
சுய எள்ளல்
சுய பெருமை
சுய பச்சாதாபம்

சந்தித்த இகழ்ச்சி
சந்தித்த மகிழ்ச்சி
சந்தித்த வறுமை
சந்தித்த நண்பர்

எதிர்கொண்ட நிகழ்வு
எதிர்கொண்ட பிரச்சனை
எதிர்கொண்ட காதல்
 எதிர்கொண்ட சமூகம்

சிந்தித்த கற்பனை
சிந்தித்த கவிதை
சிந்தித்த கதை

அனுபவித்த சோகம்
அனுபவித்த வரிகள்
அனுபவித்த பாடல்
அனுபவித்த புணர்ச்சி

எதிர்க்கும் ஜாதி
எதிர்க்கும் மதம்
எதிர்க்கும் கருத்துக்கள்

படைப்பின் நிறைகள்
படைப்பின் குறைகள்
படைப்பின் தத்துவங்கள்

கேட்ட செய்திகள்
பார்த்த புகைப்படங்கள்
நெஞ்சை வருடிய திரைப் படங்கள்
மற்றும் சில...

இது தாண்டி
யாரேனும் எழுதுங்கள்
தயவு செய்து...!

எனக்குத்தான் தோன்றவில்லை
உங்களுக்கும் கூடவா....!

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

(10) Comments

  1. கண்மணி/kanmani said...

    இதைத் தாண்டி என்ன இருக்கு நண்பரே....
    எல்லாவற்றையும் பட்டியலிட்டு விட்டீர்களே?

    April 20, 2010 12:10 AM
  2. தமிழினி said...

    உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

    பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

    ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

    நன்றி
    தமிழ்10.காம் குழுவினர்

    April 20, 2010 3:13 AM
  3. அது சரி said...

    //
    எதிர்க்கும் ஜாதி
    எதிர்க்கும் மதம்
    //

    பிடித்த ஜாதி, பிடித்த மதம் பத்தியும் நிறைய பேரு எழுதறாங்க பாஸ் :))

    April 20, 2010 4:07 AM
  4. பாலமுருகன் said...

    @கண்மணி
    @அது சரி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    April 20, 2010 8:24 AM
  5. Sabarinathan Arthanari said...

    நல்ல கவிதை

    April 20, 2010 7:11 PM
  6. பாலமுருகன் said...

    நன்றி சபரி.

    April 20, 2010 9:56 PM
  7. தமிழ் உதயம் said...

    மாறுப்பட்ட படைப்பா. முடிந்தால் இதை வாசியுங்கள். நன்றி.


    http://tamiluthayam.blogspot.com/2010/04/blog-post_13.html

    April 20, 2010 10:20 PM
  8. பாலமுருகன் said...

    நன்றி தமிழ் உதயம்.

    நிச்சயம் வாசிக்கிறேன்.

    April 20, 2010 10:32 PM
  9. LK said...

    vithyasamana sinthanai.. muyarchipom

    May 5, 2010 1:10 PM
  10. பாலமுருகன் said...

    //LK said...

    vithyasamana sinthanai.. muyarchipom
    //

    வருகைக்கு நன்றி நண்பரே.

    May 6, 2010 6:41 PM

Leave a Response