அடியே சிறுக்கி..!
உனக்காகத்தா இன்னும் உயிர் வாழுரண்டி
உன்ன நெனைச்சே சாகாம சாகுரண்டி
இழந்த பழம் பறிக்க நீ எடுத்து எரிஞ்ச கல்லு
எம்மேலபட்டு மனசு ஆயிடுச்சு நூறு சில்லு
குட்டி குட்டி மேகம் போல வெடுசிருக்கு காடெல்லாம் பருத்தி
அத பறிக்க வரும்போது நானும் வந்தேனே நிதம் உன்ன துரத்தி
ஏ மனசு பூரா நெரஞ்சுபுட்டே கண்ணான கண்ணாட்டி
அப்பவே முடிவாச்சு நீதா எம் பொண்டாட்டி
மெல்ல மெல்ல ஏத்துகிட்ட நீயும் என் காதல
அதனால கேட்டுப்புட்டேன் உயரின் இசை என் காதால
மச்சான்னு ஒருதடவ கூப்பிட்டுட்டு மறஞ்சுகிட்ட
திரும்பி பாத்து காணாம நா ஒரு நிமிஷம் மாஞ்சுபுட்ட
புளிய தோப்புக்குள்ள குடுத்தியே ஆசையா ஒரு முத்தம்
அத நெனைச்சு மனசுக்குள்ள பாட்டுதா நித்தம்
வரப்பு மேல கால வெச்சு ஏறும் போது உன் பாதம்
பணித்தண்ணி வழுக்கிவிட போகுதடி இது மார்கழி மாதம்
கம்மா தண்ணி எல்லாம் கர புரண்டு ஓடுதடி
சிறுக்கி உன் நினைப்பால எம் மனசு வாடுதடி
அழகான பொண்ணப் பார்த்தா யாருக்கும் ஆச வரும்
என்னோட காதலுக்கு இப்படியா மோசம் வரும்
சுண்டி இழுக்குதடி உன் கண்டாங்கி புடவ கட்டு
மொத்த ஊரும் கெலம்புதடி உன்னைத்தா பொண்ணு கேட்டு
எத்தன பேர் வந்தாலும் நான்தாண்டி உன் மச்சான்
இதை தானே பிரம்மனும் ஏட்டில எழுதி வெச்சான்
மத்தவங்க சொல்லக்கேட்டு என்ன மறந்திடாத சின்னப்பொண்ணு
மறந்திட்டா ஏ ஒடம்ப திங்கத்தா காத்திருக்கு இந்த மண்ணு
உனக்காகத்தா இன்னும் உயிர் வாழுரண்டி
உன்ன நெனைச்சே சாகாம சாகுரண்டி
----------------------------------------
இந்த கிராமத்து காதல பல பேரு படிச்சு பாக்க
மனசு வெச்சு பதியுங்க உங்க வாக்க
-
//உனக்காகத்தா இன்னும் உயிர் வாழுரண்டி
ReplyDeleteஉன்ன நெனைச்சே சாகாம சாகுரண்டி//
ரைட்டு
ரொம்ப பாதிக்க பட்டு இருப்பிங்க போலருக்கே
ReplyDelete//Sabarinathan Arthanari said...
ReplyDeleteரொம்ப பாதிக்க பட்டு இருப்பிங்க போலருக்கே//
ரொம்ம்ம்ப....!
காதல் நெறஞ்சிருக்கும் கிராமத்து காத்து
கிறங்கி போயிருங்க சுவாசிச்சு பாத்து
//Sabarinathan Arthanari said...
ReplyDeleteரொம்ப பாதிக்க பட்டு இருப்பிங்க போலருக்கே//
ரொம்ம்ம்ப....!
காதல் நெறஞ்சிருக்கும் கிராமத்து காத்து
கிறங்கி போயிருங்க சுவாசிச்சு பாத்து
என்னுடைய கிராமமும் நினைவில் ஓடுகிறது. அழகான பதிவு வாழ்த்துக்கள்
ReplyDeleteஉனக்காகத்தா இன்னும் உயிர் வாழுரண்டி
ReplyDeleteஉன்ன நெனைச்சே சாகாம சாகுரண்டி!!!
புளியந்தோப்புக்குள்ள கொடுத்த முத்தம் தான் நினைக்கிறேன் என்னம்மா சாகாம சாகுரீங்க
எல்லாவரிகளும் உண்மையிலேயே அனுபவிச்சி எழுதியிருக்கிங்க
ரொம்ப நல்ல இருக்கு
உங்க காதால் வளர்க.. வாழ்க...
உனக்காகத்தா இன்னும் உயிர் வாழுரண்டி
ReplyDeleteஉன்ன நெனைச்சே சாகாம சாகுரண்டி!!!
புளியந்தோப்புக்குள்ள கொடுத்த முத்தம் தான் நினைக்கிறேன் என்னம்மா சாகாம சாகுரீங்க
எல்லாவரிகளும் உண்மையிலேயே அனுபவிச்சி எழுதியிருக்கிங்க
ரொம்ப நல்ல இருக்கு
உங்க காதால் வளர்க.. வாழ்க...
Some problem in comment section.
ReplyDeleteரவிசாந்
ReplyDeleteMahesh
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
//எத்தன பேர் வந்தாலும் நான்தாண்டி உன் மச்சான்
ReplyDeleteஇதை தானே பிரம்மனும் ஏட்டில எழுதி வெச்சான் //
புதிய TR வாழ்க
//அழகான பொண்ணப் பார்த்தா யாருக்கும் ஆச வரும்
ReplyDeleteஎன்னோட காதலுக்கு இப்படியா மோசம் வரும் //
யாரது யாரது தூக்கிரலாமா ??
//Sabarinathan Arthanari said...
ReplyDelete//எத்தன பேர் வந்தாலும் நான்தாண்டி உன் மச்சான்
இதை தானே பிரம்மனும் ஏட்டில எழுதி வெச்சான் //
புதிய TR வாழ்க
//
ஏ இந்த கொல வெறி!
//Sabarinathan Arthanari said...
ReplyDeleteயாரது யாரது தூக்கிரலாமா ??//
ஒருத்தரு ரெண்டு பேரா இருந்தா பரவால்ல...!
//மொத்த ஊரும் கெலம்புதடி உன்னைத்தா பொண்ணு கேட்டு//
கவிதை அருமை.. :)
ReplyDelete//இழந்த பழம் பறிக்க நீ எடுத்து எரிஞ்ச கல்லு
ReplyDeleteஎம்மேலபட்டு மனசு ஆயிடுச்சு நூறு சில்லு//
சில்லையெல்லாம் சேர்க்கபோறார் கண்ணு
சொல்லையெல்லாம் மாலையாக்குவார் துனிஞ்சு நின்னு
நன்றி ராதை
ReplyDelete//Sabarinathan Arthanari said...
ReplyDeleteசில்லையெல்லாம் சேர்க்கபோறார் கண்ணு
சொல்லையெல்லாம் மாலையாக்குவார் துனிஞ்சு நின்னு//
இப்போ சொல்லுங்க, அடுத்த TR நீங்கதானே.
ஆகா ஒரு குரூப்பாத்தான் கெளம்பியிருபாயளோ.
ReplyDeleteநல்ல கூத்து பின்னூட்டத்தில்/
அட்ர சக்கை அப்படிபோடுன்னுன்னாம் சூப்பர் பாலா கிராமத்து வாசம்
துபையில வீசுது.
நாங்களும் கத சொல்லிகீறோம் கிரேண்மா கத வந்து பாருங்க
@அன்புடன் மலிக்கா
ReplyDeleteஉங்க பதிவ எல்லாத்தையும் படிசுட்டுதான் வரேன். உங்களுடைய பதிவுதான் (சோறுபோடும் சேறு!) இந்த கவிதை எழுத ஊக்கம் கொடுத்ததே.
//அட்ர சக்கை அப்படிபோடுன்னுன்னாம் சூப்பர் பாலா கிராமத்து வாசம்
துபையில வீசுது.//
ரொம்ப நன்றிங்கா.
அருமை எதுகை மோனை
ReplyDelete