Thursday, April 22, 2010

அதிர்வுகள் - 6 (ஒரு கமல் இரசிகரின் கேள்வி)

உங்களுக்கு வினு சக்கரவர்த்தி  யாருன்னு தெரியுமா?

"ஏம்பா, தமிழ் சினிமா பாக்கிற எங்களுக்கு வினு சக்கரவர்த்தி யார்னு தெரியாதா என்ன?" என்று நீங்கள் அங்கே கேட்கும் கேள்வி இங்கே வரை கேட்கிறது.

நீங்க கேட்டு என்னங்க பிரயோஜனம். இத படிங்க.

நேத்து  KTV ல  'நாட்டாமை' படம் பார்த்து கொண்டிருந்தேன் நம் நண்பர்களுடன். நமக்குதா வாய் சும்மா இருக்காதே, இந்த சீன்ல மீனா வருவாங்க , அடுத்த சீன்ல வினு சக்ரவர்த்தி வருவாரு பாருங்கன்னு ஆன்லைன் கமெண்ட்ரி கொடுத்து கொண்டிருந்தேன்.

அப்போ நம்ம நண்பர் ஒருத்தர் கேட்டார், "அது யாருங்க வினு சக்கரவர்த்தி?".

இதுல வேடிக்கை என்னன்னா, நம்ம நண்பர் ரொம்ப காலமா கமலோட இரசிகர். எனக்கு அப்பதா திடீர்னு ஒரு டவுட்டு வந்துது. கமல் தமிழ் படத்துலதா நடிக்கிராரான்னு.

பின்ன என்னங்க, அந்த காலத்துல இருந்து கமல் இரசிகரா இருக்கிற ஒருத்தருக்கு வினு சக்கரவர்த்தி யாருன்னு தெரியாதுன்னா என்னான்னு நெனைக்கிறது.

இத பத்தி நீங்க கண்டபடி நெனைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை.

*****************************************************

இரவினை கவிதையாய் மொழி பெயர்பேன்

இது "மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு" என்ற பாடலில் வரும் வரி. இந்த பாட்ட கேட்டுட்டு சரி நாமும் நம்ம இரவ கவிதையா மொழி பெயர்தா என்னான்னு தோனுச்சு.

அதனால ஒரு இரவுல உக்காந்து என்னத்த மொழி பெயர்கிரதுன்னு யோசிச்சப்ப....

காலையில பஸ்ல ஏறும்போது அந்த கண்டக்டர் ஐம்பது பைசா மீதி சில்லறை கொடுக்காம ஏமாத்திட்டானே, ம்ம்ம்...

நம்ம என்னதா மாஞ்சு மாஞ்சு பாத்தாலும் நம்மள ஒரு பிகரும் பாக்க மாடேங்குதே, இதுக்கு என்னதா பண்ணுறது!

ஒரு வேலையும் இல்லாட்டியும், ஏதோ கம்பனியோட மொத்த வருமானமும் என்னாலதா அப்படிங்கற மாதிரி பீலா உடுற ஆளுங்கள என்ன பண்ணலாம்?

அட ராத்திரியாவது ருசியா சாப்பிடலாமுன்னு வந்தா, ஒரு ஹோட்டலும் ஒழுங்கா இல்லையே...

ஏங்க, நீங்களே சொல்லுங்க. இதை எல்லாம் கவிதையா மொழி பெயர்தா நல்லாவா இருக்கும். என்னங்க பண்றது ராத்திரில உக்காந்து யோசிச்சா இப்படித்தான் தோணுமோ!

*****************************************************

ஒரு சின்ன கவிதை

எனக்குப் பிடிக்காதவர்களை
நான் திட்டுவதில்லை
சில சமயம்
என்னையே எனக்கு
பிடிப்பதில்லை.

*****************************************************

ஒரு சின்ன ஆசை

என்றாவது ஒரு நாள், ஊர் பேர் தெரியாத, ஆட்கள் இல்லா இடத்தில் நான் தொலைந்து போக வேண்டும்.

*****************************************************

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 

-

8 comments:

  1. //அட ராத்திரியாவது ருசியா சாப்பிடலாமுன்னு வந்தா, ஒரு ஹோட்டலும் ஒழுங்கா இல்லையே...//

    கேண்டீனும் சரி இல்லை ஹோட்டலும் சரி இல்லை.

    என்ன கொடுமைங்க பாலா இது

    ReplyDelete
  2. //ஒரு வேலையும் இல்லாட்டியும், ஏதோ கம்பனியோட மொத்த வருமானமும் என்னாலதா அப்படிங்கற மாதிரி பீலா உடுற ஆளுங்கள என்ன பண்ணலாம்?//

    கூட்டத்துல கட்டு சோத்தை அவுக்காதீங்க பல பேர் மன வருத்த படுவாங்க :)

    ReplyDelete
  3. //என்றாவது ஒரு நாள், ஊர் பேர் தெரியாத, ஆட்கள் இல்லா இடத்தில் நான் தொலைந்து போக வேண்டும்.//

    டைம் மெசினில சின்ன வயசுக்கு போக முடியுமா உங்களால.

    ஆமா உலகம் நல்ல கவிஞரை இழந்துருமே பரவாயில்லையா ?!

    ReplyDelete
  4. //நம்ம என்னதா மாஞ்சு மாஞ்சு பாத்தாலும் நம்மள ஒரு பிகரும் பாக்க மாடேங்குதே, இதுக்கு என்னதா பண்ணுறது!//

    ஃபீலிங்க் பாஸ் ஃபீலிங் ம்ம்ம் (பெருமூச்சு...)

    ReplyDelete
  5. //Sabarinathan Arthanari said...

    கேண்டீனும் சரி இல்லை ஹோட்டலும் சரி இல்லை.

    என்ன கொடுமைங்க பாலா இது//


    ஏ சோக கதைய கேளு தாய்க்குலமே...

    ReplyDelete
  6. //கூட்டத்துல கட்டு சோத்தை அவுக்காதீங்க பல பேர் மன வருத்த படுவாங்க :)//

    குற்றமுள்ள நெஞ்சு குருகுருக்குமோ?

    ReplyDelete
  7. //ஆமா உலகம் நல்ல கவிஞரை இழந்துருமே பரவாயில்லையா ?!//

    நம்மள இன்னுமா நம்பறாங்க....!!

    ReplyDelete
  8. //ஃபீலிங்க் பாஸ் ஃபீலிங் ம்ம்ம் (பெருமூச்சு...)//

    பெருமூச்சு விட்டே உடம்பு இளைச்சு போச்சே...

    ReplyDelete