Tuesday, March 23, 2010

சூழ்நிலைக் கைதிகள்

நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

நடைபாதையில் தூங்கும்
மனிதர்களை இறக்கத்துடன் பார்த்து
கால் படாமல் ஒதுங்கிச் செல்வோம் 
ஆனால் அவர்களுக்கு
உறைவிடம் தரமாட்டோம்.
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

பிச்சை எடுக்கும் சிறுமிக்கு
ஒத்தை ரூபாய் பிசையிட்டு
கர்ணனாய் நினைத்து நகர்ந்துவிடுவோம்
அச்சிறுமியின் துயரப் பின்புலம் பற்றி
எண்ணமாட்டோம்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

பேருந்துப் பயணத்தில்
நிற்கும் பெரியவருக்கு
யாராவது இடம் கொடுப்பார்களா என்று
சுற்றிலும் பார்த்துவிட்டு
உறங்குவது போல் கண்மூடிக் கொள்வோம்
எமது இருக்கையில்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

சாலை விதிகளை மீறும்
வாகன ஓட்டிகளை
மனதிற்குள் திட்டிக் கொள்வோம்
எங்கள் வாகனங்களை
நிறுத்தமில்லா இடங்களிலும் நிறுத்துவோம்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

 வெளிநாடுகளின் தூய்மையைப் பற்றி
மாய்ந்து மாய்ந்து பேசுவோம்
ஆனால் எம் நாட்டில்
கூச்சப் படாமல்  பொது இடங்களை
அசுத்தம் செய்வோம்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

கண்ணெதிரே அநியாயம் நடப்பினும்
பாராமுகமாய் இருந்து விட்டு
சமுதாயத்தை திட்டுவோம்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.
-

6 comments:

  1. ஆம். ”சூழ்நிலை கைதி” இன் சூழ்நிலை கைதிகள் :)

    ReplyDelete
  2. பதிவு எல்லாம் படித்து விட்டு
    அப்புறம் கமண்ட்ஸ் போட்டே ஆவோம்
    (அது தான் மிரட்டுரிங்கலேப்பா)
    ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

    ReplyDelete
  3. சபரி, மங்குனி அமைச்சர்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  4. அருமை நண்பரே இது ஒவோருவர்கும் உணர வேண்டிய விஷயம் நல்ல முயற்சி

    ReplyDelete