Tuesday, March 2, 2010

கவிதை எழுதச்சொல்லிய கவிதை

நானும் நல்லவன்தான்
முகத்தை திருப்பிக்கொண்டிருக்கும்வரை
எதிரே இறுக்கமான உடையணிந்த பெண்.

வலப்புறம் இதயம் வேகமாக துடிப்பதை உணர முடிந்தது
அரவணைப்பில் பெண்.

காத்திருப்பதின் வலி அறிந்தேன்
என்னவள் எனக்காக காத்திருந்த பொழுது.

ஆட்கள் யாருமற்ற தீவில்
என்னோடு சேர்த்து இறக்கி விடப்பட்ட எதிரி
ஏனோ எதிரியாக தெரியவில்லை.

ஒரு கவிதை பாதியில் நின்று போனது
மகிழ்ச்சி!
அது காதல் தோல்வியால் எழுத ஆரம்பித்த கவிதை.

கவிஞனாகிவிடுவேனோ என்று பயமாய் இருக்கிறது
இரவின் தனிமையில் அமர்ந்தபடி நான்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன்
என்னவளே நீ என்னை
காதலித்தாலும் வெறுத்தாலும் எனக்கு
ஆயிரமாயிரம் கவிதைகள்.

என்னைப்பற்றி இன்னும் எத்தனை கவிதைதான் எழுதுவாய்
கூச்சத்துடன் கேட்கிறது கவிதை.

நிலவு தர்மசங்கடப் பட்டது
பசியால் அழும் குழந்தைக்கு
தன்னை காட்டி சமாதானப் படுத்தும் ஏழைத் தாய்.

ஒற்றையடி பாதையில் எதிர்ப்பட்ட பிரிந்த காதலி
என்ன செய்ய வேண்டும் நான் இப்பொழுது!?


இது அனைத்தும் நான் twitter ல் எழுதியவை.

3 comments:

  1. முயற்சி திருவினை ஆக்கும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி Madurai Saravanan

    ReplyDelete
  3. //யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
    இறந்தாலும் ஆயிரம் பொன்
    என்னவளே நீ என்னை
    காதலித்தாலும் வெறுத்தாலும் எனக்கு
    ஆயிரமாயிரம் கவிதைகள்.
    //

    Fantastic words...

    ReplyDelete