Thursday, May 6, 2010

அதிர்வுகள் - 7 (லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சு)

லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சு

காதலிக்கும் போது இருக்கும் சந்தோஷத்த விட  அந்த பொண்ண மொத மொதல்ல பாத்து, பேசி, மெல்ல மெல்ல லவ்ஸ் ஸ்டார்ட் ஆகும் பாருங்க அதுதா.. அதுதா சந்தோசமே.

வர்ற போற பொண்ணுகள எல்லாம் சும்மா வேடிக்க பாத்துகிட்டு (அட.. அதாங்க சைட் அடிக்கிறது) இருக்கும் போது அதுல ஏதோ ஒன்னு மனசுக்கு ரொம்பவும் புடுச்சு போகும். அப்புறம் என்ன, கொஞ்ச நாளைக்கு அந்த பொண்ணு எங்க போனாலும் அது கண்ணுல படர மாதிரியே திரிய வேண்டியது. அதுவும் போனா போகுதுன்னு அப்பப்போ நம்மள ஒரு பார்வை பாத்து வைக்கும்.

என்னதா சொல்லுங்க, நம்மள ஒரு ஓரப் பார்வை பாக்கும் போது அப்படியே மண்டகுள்ள சுறுங்கும், நெஞ்சு லப் டப்புன்னு அடிக்கிறதுக்கு பதிலா தம் தும்முன்னு அடிச்சுக்கும், பக்கத்துல இருக்கிற நண்பன் 'டேய் தல வலிக்குதுடா' ன்னு சொன்னாக் கூட சம்பந்தம் இல்லாம கேனத்தனமா சிரிக்கத் தோணும்.

எப்பவாவது பாக்கறது மாறி நம்மள அடிக்கடி பாக்க ஆரம்பிக்கும். அப்பவே மனுஷனுக்கு பாதி கிறுக்கு புடுச்சு போயிரும். எந்த நேரமும் அவ நெனப்பாவே இருக்கும். அடுத்து கொஞ்ச நாள்ல நம்மள பாத்து லேசா சிரிக்க ஆரம்பிக்கும்.

இதுக்கபுரந்தா ஒரு சின்ன தயக்கம், யாரு முதல்ல பேசுறதுன்னு.  ஆனாலும் பாருங்க இந்த பசங்கதா மொதல்ல போயி தத்து பித்துன்னு எதையாவது உளறி பேச்சை ஆரம்பிப்பாங்க.

அதுக்கப்புறம் லவ், ஊர்சுத்தறது, பிரச்சனை, முடிஞ்சா கல்யாணம்(?!)  அப்படின்னு போகும். ஆனா, மொத மொதல்ல ஒரு பொண்ண பாக்கறதுல இருந்து ரெண்டு பேருக்கும் லவ் ஸ்டார்ட் ஆகறது வரைக்கும் இருக்கிற ஒரு த்ரில், கிக்கு இதெல்லாம் காதலிச்சதுக்கப்புரம் இல்லைன்னே தோணுது.

ரொம்ப அனுபவிச்சுதா பாட்டு எழுதிருக்காங்க

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா

********************************************************
 பார்க்க பார்க்க பிடிக்குமா?

"என்ன மாதிரி பசங்கள பாத்தா பிடிக்காது, பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்".

ஆனா எனக்கு எந்த பொண்ண பாத்தாலும் உடனே பிடிக்குது. ஆனா பார்க்க பார்க்க கொஞ்ச நாள்ல பிடிக்காம போயிருது.

ஒரு வேளை அந்த டயலாக்கு பசங்களுக்கு பொருந்தாது போலிருக்கு!

********************************************************

ஒரு சின்ன கவிதை

நான் எழுதிய
கவிதைகள் எல்லாம்
தாங்கள் சரிவர எழுதப் படவில்லை என்று
என் மீது கோபம் கொண்டன
என்னவளைப் பார்த்த பின்பு.

********************************************************
இவளோ தூரம் வந்துடீங்க, ஒரு ஒட்டு போட்டுட்டு போங்க.
********************************************************

-

13 comments:

  1. // நம்மள ஒரு ஓரப் பார்வை பாக்கும் போது அப்படியே மண்டகுள்ள சுறுங்கும், நெஞ்சு லப் டப்புன்னு அடிக்கிறதுக்கு பதிலா தம் தும்முன்னு அடிச்சுக்கும் //

    நண்பரே
    இது காதலிக்கிற பொண்ணுகிட்ட மட்டும்தானா இல்ல... பாக்குற எல்லா பொண்ணுங்ககிட்டயுமா...

    அவுங்க அனுபவிச்சு பாட்டு எழுதியிருக்காங்க... நீங்களும்தான் அனுபவிச்சி எழுதியிருக்கீங்க.. ரொம்ப ரைட்

    ReplyDelete
  2. @Mahesh

    //இது காதலிக்கிற பொண்ணுகிட்ட மட்டும்தானா இல்ல... பாக்குற எல்லா பொண்ணுங்ககிட்டயுமா...//

    இதுல எதுவும் உள்குத்து இருக்கா?!

    ReplyDelete
  3. //வெடிக்க பாத்துகிட்டு//

    ரைட்டு

    ReplyDelete
  4. //"என்ன மாதிரி பசங்கள பாத்தா பிடிக்காது, பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்".//

    அதான பார்த்தேன்

    ReplyDelete
  5. @Sabarinathan அர்த்தநாரி

    //
    //வெடிக்க பாத்துகிட்டு//

    ரைட்டு//

    மாத்திட்டேன்.

    ReplyDelete
  6. உள்குத்து ஒன்னும் இல்லீங்க.. நீங்க இதுல தெளிவா சொல்லிருக்கிறது போல என்னோட நெருங்கிய நண்பர் ஒருத்தருக்கு அப்போ அப்போ இதெல்லாம் நடக்கும்..

    ReplyDelete
  7. //Mahesh said...

    உள்குத்து ஒன்னும் இல்லீங்க.. நீங்க இதுல தெளிவா சொல்லிருக்கிறது போல என்னோட நெருங்கிய நண்பர் ஒருத்தருக்கு அப்போ அப்போ இதெல்லாம் நடக்கும்..
    //

    அதானே. நான் ரொம்ப நல்ல பையனாக்கும்.

    ReplyDelete
  8. //LK said...

    nalal sirichen ithai padichitu
    //

    பாத்திங்களா, நம்ம பொழப்பு சிரிப்பா சிரிக்குது.

    ReplyDelete
  9. புரியாத வயதில் காதல் ஆஹா...பறக்க வானமே எல்லை....

    ReplyDelete
  10. //ஜெய்லானி said...

    புரியாத வயதில் காதல் ஆஹா...பறக்க வானமே எல்லை....
    //

    வருகைக்கு நன்றி ஜெய்லானி

    ஒவ்வொரு வயதிலும் காதலுக்கான அடிப்படைக் காரணம் வேறுபடுகிறது.

    ReplyDelete
  11. பார்க்க பார்க்க பிடிக்குமா?

    "என்ன மாதிரி பசங்கள பாத்தா பிடிக்காது, பார்க்க //பார்க்கத்தான் பிடிக்கும்".

    ஆனா எனக்கு எந்த பொண்ண பாத்தாலும் உடனே பிடிக்குது. ஆனா பார்க்க பார்க்க கொஞ்ச நாள்ல பிடிக்காம போயிருது.

    ஒரு வேளை அந்த டயலாக்கு பசங்களுக்கு பொருந்தாது போலிருக்கு!///


    ஆமால்ல

    ReplyDelete
  12. நன்றி மங்குனி அமைச்சர்

    ReplyDelete