Tuesday, June 22, 2010

கானல் நீர்

படிக்கப் படாத கவிதை புத்தகம்
மழை பார்க்க திறந்த ஜன்னல்
முகம் வருடும் குளிர் காற்று
சுகமான சாய்வு நாற்காலி
பசி அடங்கிய பின் மதியம்
குளிருக்கு இதமாய் கோப்பை தேநீர்
படித்த வரியை கண்மூடி ரசிக்க அமைதி

வாழ்க்கைப் புத்தகத்தின்
அடிக்கோடிட்ட வரியாய்
ஒரு நாள்

வரும் ஞாயிறாவது கிட்டுமா
இவை அனைத்தும்
ஏக்கத்தோடு மனது
அலுவலக வேலைக்கிடையில்.

-

18 comments:

  1. நீங்கள் பேராசைக்காரர் நண்பரே..

    ReplyDelete
  2. //நீங்கள் பேராசைக்காரர் நண்பரே..//

    உண்மைதான் நண்பரே.
    இவ்வளவும் ஒருசேர கிடைக்க வேண்டும் என்று நினைப்பது பேராசைதான். :)

    நன்றி.

    ReplyDelete
  3. /*குளிருக்கு இதமாய் கோப்பை தேநீர்*/
    போதுமா இவை?

    நல்ல கற்பனை :)

    ReplyDelete
  4. "நாளைக்கும் நிலவு வரும் வரும் ஞாயிறு நீங்கள் இருப்பீர்களா? "
    நண்பரே?

    ReplyDelete
  5. அலுவலக வேலைக்கிடையிலும் அழகிய கவிதை கிடைத்திருக்கறதே!
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  6. @ Prabhakar .MS
    ///*குளிருக்கு இதமாய் கோப்பை தேநீர்*/
    போதுமா இவை?

    நல்ல கற்பனை :)//

    நன்றி. எதிலும் நிறைவடையாத மனது :)

    ReplyDelete
  7. நல்ல கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. @sarvesh
    //"நாளைக்கும் நிலவு வரும் வரும் ஞாயிறு நீங்கள் இருப்பீர்களா? "
    நண்பரே?//

    நம்புவோம் நண்பரே. நம்பிக்கைதானே வாழ்க்கை.

    ReplyDelete
  9. நாடோடியின் பயணம் எனும் சகீராவின் பாடலும் இதை ஒத்ததே

    //வாழ்க்கைப் புத்தகத்தின்
    அடிக்கோடிட்ட வரியாய்
    ஒரு நாள்//
    எல்லா பக்கங்களும் அடிக்கோடாக அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. @தமிழ் மீரான்

    //அலுவலக வேலைக்கிடையிலும் அழகிய கவிதை கிடைத்திருக்கறதே!
    வாழ்த்துக்கள் நண்பரே//

    எண்ணக் கதவு இடம் பொருள் பார்க்காமல் திறந்து கொள்கிறது.

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  11. @VELU.G

    //நல்ல கவிதை வாழ்த்துக்கள்//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  12. @Sabarinathan Arthanari

    //நாடோடியின் பயணம் எனும் சகீராவின் பாடலும் இதை ஒத்ததே

    //வாழ்க்கைப் புத்தகத்தின்
    அடிக்கோடிட்ட வரியாய்
    ஒரு நாள்//
    எல்லா பக்கங்களும் அடிக்கோடாக அமைய வாழ்த்துக்கள்//

    நன்றி சபரி.

    அந்தப் பாடலின் சுட்டி கிடைத்தால் தெரியப்படுத்துங்கள். படித்துப் பார்க்க ஆர்வமாக உள்ளது.

    ReplyDelete
  13. இந்தக் கார்ப்பரேட் உலகத்துக்கேற்ற கவிதை

    ReplyDelete
  14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி "உழவன்".

    ReplyDelete
  15. நியாயமான ஏக்கம் தான் .... கிட்டுமா?

    கவிதை நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  16. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சி.கருணாகரசு

    ReplyDelete
  17. Software Engineer -யா இருந்துக்கிட்டு இந்த மாதிரி கவிதை எழுத நேரம் கெடைக்கறதே பெரிய விஷயம் தான் ...இதுல மத்த ஆசை எல்லாம் எதுக்கு?

    ReplyDelete
  18. @தனி காட்டு ராஜா

    //இதுல மத்த ஆசை எல்லாம் எதுக்கு?//

    ஆசை கொள்வது மனித இயல்பு நண்பரே.

    ReplyDelete