படிக்கப் படாத கவிதை புத்தகம்
மழை பார்க்க திறந்த ஜன்னல்
முகம் வருடும் குளிர் காற்று
சுகமான சாய்வு நாற்காலி
பசி அடங்கிய பின் மதியம்
குளிருக்கு இதமாய் கோப்பை தேநீர்
படித்த வரியை கண்மூடி ரசிக்க அமைதி
வாழ்க்கைப் புத்தகத்தின்
அடிக்கோடிட்ட வரியாய்
ஒரு நாள்
வரும் ஞாயிறாவது கிட்டுமா
இவை அனைத்தும்
ஏக்கத்தோடு மனது
அலுவலக வேலைக்கிடையில்.
-
நீங்கள் பேராசைக்காரர் நண்பரே..
ReplyDelete//நீங்கள் பேராசைக்காரர் நண்பரே..//
ReplyDeleteஉண்மைதான் நண்பரே.
இவ்வளவும் ஒருசேர கிடைக்க வேண்டும் என்று நினைப்பது பேராசைதான். :)
நன்றி.
/*குளிருக்கு இதமாய் கோப்பை தேநீர்*/
ReplyDeleteபோதுமா இவை?
நல்ல கற்பனை :)
"நாளைக்கும் நிலவு வரும் வரும் ஞாயிறு நீங்கள் இருப்பீர்களா? "
ReplyDeleteநண்பரே?
அலுவலக வேலைக்கிடையிலும் அழகிய கவிதை கிடைத்திருக்கறதே!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
@ Prabhakar .MS
ReplyDelete///*குளிருக்கு இதமாய் கோப்பை தேநீர்*/
போதுமா இவை?
நல்ல கற்பனை :)//
நன்றி. எதிலும் நிறைவடையாத மனது :)
நல்ல கவிதை வாழ்த்துக்கள்
ReplyDelete@sarvesh
ReplyDelete//"நாளைக்கும் நிலவு வரும் வரும் ஞாயிறு நீங்கள் இருப்பீர்களா? "
நண்பரே?//
நம்புவோம் நண்பரே. நம்பிக்கைதானே வாழ்க்கை.
நாடோடியின் பயணம் எனும் சகீராவின் பாடலும் இதை ஒத்ததே
ReplyDelete//வாழ்க்கைப் புத்தகத்தின்
அடிக்கோடிட்ட வரியாய்
ஒரு நாள்//
எல்லா பக்கங்களும் அடிக்கோடாக அமைய வாழ்த்துக்கள்
@தமிழ் மீரான்
ReplyDelete//அலுவலக வேலைக்கிடையிலும் அழகிய கவிதை கிடைத்திருக்கறதே!
வாழ்த்துக்கள் நண்பரே//
எண்ணக் கதவு இடம் பொருள் பார்க்காமல் திறந்து கொள்கிறது.
நன்றி நண்பரே.
@VELU.G
ReplyDelete//நல்ல கவிதை வாழ்த்துக்கள்//
நன்றி நண்பரே
@Sabarinathan Arthanari
ReplyDelete//நாடோடியின் பயணம் எனும் சகீராவின் பாடலும் இதை ஒத்ததே
//வாழ்க்கைப் புத்தகத்தின்
அடிக்கோடிட்ட வரியாய்
ஒரு நாள்//
எல்லா பக்கங்களும் அடிக்கோடாக அமைய வாழ்த்துக்கள்//
நன்றி சபரி.
அந்தப் பாடலின் சுட்டி கிடைத்தால் தெரியப்படுத்துங்கள். படித்துப் பார்க்க ஆர்வமாக உள்ளது.
இந்தக் கார்ப்பரேட் உலகத்துக்கேற்ற கவிதை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி "உழவன்".
ReplyDeleteநியாயமான ஏக்கம் தான் .... கிட்டுமா?
ReplyDeleteகவிதை நல்லாயிருக்குங்க.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சி.கருணாகரசு
ReplyDeleteSoftware Engineer -யா இருந்துக்கிட்டு இந்த மாதிரி கவிதை எழுத நேரம் கெடைக்கறதே பெரிய விஷயம் தான் ...இதுல மத்த ஆசை எல்லாம் எதுக்கு?
ReplyDelete@தனி காட்டு ராஜா
ReplyDelete//இதுல மத்த ஆசை எல்லாம் எதுக்கு?//
ஆசை கொள்வது மனித இயல்பு நண்பரே.