மதில் மேல் பூனை
நிற்கும் மதில் தாண்ட விரும்பி
இடமா வலமா குழம்பி
ஏதோ ஒரு பக்கம்
குதித்த பின்புதான் தெரிந்தது
குதித்த இடம்
ஒரு மதில் என்று .
தீதும் நன்றும்
என் விரல் வளர்த்த நகங்கள்
என் உடல் கிழிப்பது கண்டு
கை கொட்டும் விரல்கள்
தங்கள் நகம் மறந்து.
பழக்கமில்லாத கனவு
வண்ணம் தீட்டிய கம்பிகளுக்கிடையில்
சுருண்டிருந்த புலி ஒன்று
கனவு கண்டு திடுக்கிட்டது
தான் காட்டிற்குள் வேட்டையாடுவதாய்.
-
Subscribe to:
Post Comments (Atom)


பழக்கமில்லாத கனவு
அழகு..
நயம்..
எதார்த்தம்.
அருமை!!
மதில் மேல் பூனை
நிற்கும் மதில் தாண்ட விரும்பி
இடமா வலமா குழம்பி
ஏதோ ஒரு பக்கம்
குதித்த பின்புதான் தெரிந்தது
குதித்த இடம்
ஒரு மதில் என்று .
வாழ்க்கையில் மனிதர்களும் இப்படித்தான்.
@முனைவர்.இரா.குணசீலன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
//வாழ்க்கையில் மனிதர்களும் இப்படித்தான்.//
ஆம். குழம்பித் தெளிந்து, எடுக்கும் முடிவிலிருந்து தொடங்கும் அடுத்த குழப்பம்.
//குதித்த இடம்
ஒரு மதில் என்று .//
அகலமான மதில் போல ;)
//தான் காட்டிற்குள் வேட்டையாடுவதாய்.//
வேட்டையாடப்படுவதாய் இருந்தால் தான் ரொம்ம்ப கஷ்டங்க
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சபரி