நகர வாழ்க்கை

Posted by : Balamurugan | Thursday, June 3, 2010 | Published in

நகர வாழ்க்கை
கடிகார வட்டத்தினுள்
சுற்றிவரும் முள்ளாய்
நான்.

பொய்முகம்
மூடிய முகத்தினுள்
முரண்பட்டு நின்றது
அகம்.

நூதன திருட்டு
எந்த பயமும் இல்லாமல்
அனுமதியின்றி எடுத்துச் சென்றாள்
என் கண் முன்னே
இதயத்தை.

கனவு
நிகழ் காலம் தாண்டி
அழைத்துச் செல்லும்
கால இயந்திரம்.

கனவு
நிகழாத நிகழ்வை
நிகழ்வதாகக் காட்டும்
மாயக் கண்ணாடி.

தொழில்நுட்பம்
அலைபேசியில்
கண்களால் பேசிக் கொண்டோம்
எஸ்.எம்.எஸ்.

-

(6) Comments

  1. Sabarinathan Arthanari said...

    //கனவு
    நிகழ் காலம் தாண்டி
    அழைத்துச் செல்லும்
    கால இயந்திரம்.//
    நல்லா இருக்குங்க

    June 3, 2010 10:32 AM
  2. பாலமுருகன் said...

    நன்றி சபரி

    June 3, 2010 11:49 AM
  3. உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

    அருமை...

    மிக அருமை ...

    June 3, 2010 1:38 PM
  4. பாலமுருகன் said...

    நன்றி உலவு.காம்

    June 3, 2010 6:07 PM
  5. மங்குனி அமைச்சர் said...

    தொழில் நுட்பம் சூப்பருங்க

    June 5, 2010 5:26 PM
  6. பாலமுருகன் said...

    நன்றி மங்குனி அமைச்சரே

    June 7, 2010 10:35 AM

Leave a Response