அனுபவித்த இன்பத்தை
மீண்டும் மீண்டும் தேடும்
ருசி கண்ட பூனையாய்
மனது
நம்பிக்கை மேல் இழுக்க
துன்பங்கள் கீழ் இழுக்க
பள்ளத்தின் அந்தரத்தில்
வாழ்க்கை
வாழ்க்கையின் அர்த்தம் தேடி
புரியாத புதிர்தான்
வாழ்க்கை என்று புரிந்து கொண்ட
ஞானம்
முன்னே புகழ்வதும்
பின்னே இகழ்வதுமாய்
மனிதம் மறந்துவிட்ட
சுற்றம்
வெறி கொண்ட மக்களிடம்
பிறர் நலன் என்பது
கேலிப் பொருளான
பரிதாபம்
பொருளீட்டும் கட்டாயத்தில்
தன்மானத்தோடு சேர்த்தே
இழந்துவிட்ட
நிம்மதி
சற்றேனும் நிம்மதி
என்றுணரும் இரவு
வேண்டும் எனக்கு
"விடியாத இரவொன்று".
-
அருமை..
ReplyDeleteமிக்க நன்றி முனைவர்.இரா.குணசீலன்
ReplyDeleteமிக மிக அருமை!
ReplyDeleteநன்றி Prabhakar .MS
ReplyDelete//வாழ்க்கையின் அர்த்தம் தேடி
ReplyDeleteபுரியாத புதிர்தான்
வாழ்க்கை என்று புரிந்து கொண்ட
ஞானம் //
நல்லா இருக்குங்க
நன்றி சபரி
ReplyDeleteமனிதத்தை மிதித்து பொருள் புரட்டும் பூமியாய் மாறி வந்தாலும் இன்னும் அழியவில்லை என்று மனிதம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழித்தபடிதான் பாலமுருகன்.நம்புவோம்.வாழ்வோம்.
ReplyDeleteகவிதை அருமை
ReplyDelete//மனிதம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழித்தபடிதான்//
ReplyDeleteஉண்மைதான்
மிக்க நன்றி ஹேமா.
நன்றி VELU.G
ReplyDeleteவிடி வானில் விடியாத உள்ளம் கேட்கும் கவிக்கு வந்தனங்கள் ...
ReplyDeleteவந்தனங்கள்.
ReplyDeleteநன்றி நியோ