Monday, February 22, 2010

புத்தகம் எழுதுவது எப்படி?

மு.கு: எழுத்துலகில் எனக்கிருக்கும் 25 வருட அனுபவத்தை எப்படி அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாக ஆக்குவது என்று யோசித்ததில் உருவானது இந்த பதிவு.

சரி இப்போ "புத்தகம் எழுதுவது எப்படி?" ன்னு பாத்து அத அப்படியே பாலோ பண்ணி நீங்களும் ஒரு புத்தகத்த எழுதிபோடுங்க மக்கா.(என்னது, தொனி மாறுன மாதிரி இருக்குது!?)

முதல்ல என்ன எழுதறதுன்னு முடிவு பண்ணனும். அதுக்கு தனிமையில உக்காந்து யோசிக்கறது ரொம்ம்ம்ப முக்கியம். தனிமையில உக்காந்து என்ன மாதிரியெல்லாம் யோசிக்கலாமுன்னு இன்னொருநாள் சொல்லித்தர்றேன், இப்போ புத்தகத்த பத்தி மட்டும் யோசிப்போம். அப்புறம், தனிமை கிடைக்கிலேன்னா அத நீங்களா ஏற்படுத்திக்கணும்.

அதுக்கு கொசுக்கடிக்காத ஹோட்டல்லா பார்த்து ரூம் போடலாம்.
பக்கத்துல ஆள் நடமாட்டமில்லாத மலை இருந்தால் சரக்கு, சிகரெட் (பழக்கமிருந்தால் மட்டும்) சகிதமாக சென்று அமர்ந்து விடலாம்.
ஒரு கப்பலை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு நடு கடலுக்கு சென்று விடலாம்.
அல்லது குறைந்த பட்சம் பாத்ரூம் சென்று மணிக்கணக்காக அமர்ந்து விடலாம்.

சரி, எப்படியோ ஒரு வழியாக தனிமையும் கிடைச்சு எழுத ஐடியாவும் கிடைச்சுருச்சா, அப்போ அடுத்து என்ன பண்ணலாமுன்னு பார்ப்போம்.

யோசிச்சத பேப்பரும் பேனாவும் வச்சும் எழுதலாம் அல்லது கணினியிலும் தட்டச்சலாம்.

உங்க கையெழுத்து ஓரளவுக்காவது அடுத்தவங்களால படிக்கிற மாதிரி இருந்தா நீங்களே எழுதலாம்.

அல்லது நீங்க சொல்லச்சொல்ல வேற யாரையாவது வெச்சும் எழுத வைக்கலாம்(அதுக்கு சம்பளம் கேக்காதவரா இருந்தா நல்லது)
கண்டிப்பா பேனாவ வெச்சுத்தா எழுதனுமுன்னு ஒன்னும் கிடையாது, பென்சில வெச்சுக்கூட எழுதலாம்.

தட்டச்சரமாதிரி இருந்தா அதையும் நீங்களே பண்ணலாம் அல்லது அதுக்கும் ஆள் வெச்சுக்கலாம்.

(அம்மாடி எத்தன 'லாம்'!! ராசி பலன் படிக்கிற மாதிரி இருக்குதோ?)

எப்படியோ எழுதியோ, தட்டச்சியோ முடிச்சாச்சா அத அப்படியே ஒரு பதிபகத்துல கொடுத்து சொந்த செலவுல கொறஞ்ச பட்சம் 1000 பிரதியாவது போடுங்க.

புத்தகம் தயாராயிடுச்சா! அப்புறம் என்ன யாராவது ஒரு பிரமுகர வெச்சு புத்தக வெளியீட்டு விழா கொண்டாடவேண்டியதுதானே... எவன் படிச்சா நமக்கு என்ன, படிக்காட்டி நமக்கு என்ன அது அவனவன் தலையெழுத்து விடுங்க பாஸ்.

இன்னும் ஏதாவது ஐடியா தேவைப்பட்டுச்சுன்னா..... (திருந்தவே மாட்டியா??) சரி விடுங்க நல்லது சொன்ன யாரு கேக்கிறாங்க.

பி.கு: 25 வருச அனுபவமுன்னு சொன்னது நா எழுதி பழக ஆரம்பிச்சதில் இருந்து (என்ன்ன்னா வில்லத்தனம்?).

4 comments:

  1. //சரி விடுங்க நல்லது சொன்ன யாரு கேக்கிறாங்க.

    என்ன்ன்னா வில்லத்தனம்?//

    அதான பாருங்க ;)

    ReplyDelete
  2. வில்லன் நல்லது சொன்ன கேட்டுக்க மாட்டாங்களோ!!!

    ReplyDelete
  3. எதோ ஒரு கொல வெறியோட எழுதுனீ ங்களோ (!)?

    ReplyDelete
  4. அழைப்பை ஏற்று வருகை தந்ததிற்கு மிக்க நன்றி Mohan

    கொல வெறியா? அப்டீன்னா!? :D

    ReplyDelete