Monday, February 22, 2010

சில நிகழ்வுகள்

உவகை அளிக்கும் நிகழ்வின் சுவையை கடக்கும் மனது நொடிப்பொழுதில் மாறிவிடுகிறது விரும்பத்தகா நிகழ்வின் நீட்சியிலும் கூட.

ஒரு சில கணங்கள் வாழ்க்கையின் ஓட்டத்தை தலைகீழாக புரட்டிப்போட்டுவிடும். சில நேரம் வாழ்க்கை நம்மோடு பயணிப்பது போல் இருக்கிறது, சில நேரங்களில் வாழ்கை சுழலில் மாட்டிக்கொண்டது போலவும் இருக்கிறது. நமது சூழ்நிலையும் சுற்றுப்புறமும்தான் பெரும்பாலும் இதை தீர்மானிப்பதோடு நம்மை சூழ்நிலைக்கைதியாகவும் ஆக்குகிறது.

ஓடும் பேருந்தில் ஏற எத்தனிக்கையில் கம்பியை பிடிக்க முடியாமல் போன கையை அருகில் இருப்பவர் பிடிக்கும் தருணம் உயிரின் மதிப்பை உணர்த்துவதோடு நம்மின் அலட்சியத்தையும் கோடிட்டு காட்டும் நிகழ்வு.

கைத்தடியை தட்டித் தட்டி சாலையை கடக்கும் கண்பார்வை அற்றவரின் நிதானம், வாகனப் போக்குவரத்தின் இடையே அவசரமாக ஓடி வாகன ஓட்டியிடம் வசவு வாங்கியதை எண்ணி வெட்கம் கொள்ள வைக்கும் நிகழ்வு.

அக்கறையுடனும் கவனத்துடனும் செய்யப்பட்ட வேலை மேலதிகாரியின் அலட்சியப் புறக்கணிப்பு உழைப்பின் மீதே அவநம்பிக்கை கொள்ளச் செய்யும் நிகழ்வு.

உருகி உருகி காதலித்த பெண் காதலை புறம் தள்ளி பணக்காரனை திருமணம் செய்வது, தன்னின் இயலாமையை இடித்துரைக்கும் நிகழ்வு.

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன அதன் முக்கியத்துவம் அறியப்படாமலே!

2 comments:

  1. வாழ்கையில ரொம்ப நிகழ்வுகள் சந்திசிருகீங்கன்னு நினைக்கிறேன். நீங்க சொன்னமாதிரி ஒருசில கணங்கள் பல நிகழ்வுகள் என்னையும் தலைகீழாக புரட்டி போட்டிருக்கு. நல்ல சிந்தனை உங்களுக்கு. இன்னும் வளரட்டும்...

    ReplyDelete
  2. மிக்க நன்றி மகேஷ்

    ReplyDelete