Thursday, December 16, 2010

மெளனமும் நட்பும்

மெளனமும் நட்பும்

ஏதேதோ சொல்ல வேண்டும்
என்று தோன்றும் தருணங்களில்
மெளனம் வந்து காப்பாற்றி விடுகிறது
எங்கள் நட்பை.

நிலையில்லா மனது

கல்லூரி நாட்களில் பார்த்துப் பார்த்து
உருகிய பெண்
அவளின் திருமணச் செய்தி கேட்டு
உறங்காமல் கிடந்த நாட்கள்...
சில வருடங்களுக்குப் பின் பேருந்துப் பயணத்தில்
அவள் வீடு கடக்கையில் எழுந்த
இனம் புரியாத உணர்வை
கலைத்துச் சென்றாள்
அடுத்த நிறுத்தத்தில் ஏறிய
தாவணிப் பெண்.

உதிர நினைக்கும் இலை

இலையுதிர் காலத்திற்காய்
ஏங்கும் இலை...
வாழ்ந்து கெட்டவனின்
இறுதிக்கால வாழ்க்கை.


வழி தெரியவில்லை

எவ்வளவு சொல்லியும் மனது
சமாதானமடையவில்லை
என் கற்பனைக்கு அகப்படாத வரிகளை
அடுத்தவரின் கவிதையில்
படிக்கும் போது.


-

5 comments:

  1. ""எவ்வளவு சொல்லியும் மனது
    சமாதானமடையவில்லை
    என் கற்பனைக்கு அகப்படாத வரிகளை
    அடுத்தவரின் கவிதையில்
    படிக்கும் போது""


    -Nice!

    ReplyDelete
  2. //இனம் புரியாத உணர்வை
    கலைத்துச் சென்றாள்
    அடுத்த நிறுத்தத்தில் ஏறிய
    தாவணிப் பெண்.//

    ம்ம்ம்ம்... இருக்கட்டும் ... நல்லா இருக்குங்க உங்க வரிகள்

    ReplyDelete
  3. நன்றி Samudra
    நன்றி அரசன்

    ReplyDelete
  4. நல்ல கவிதை
    இவன்
    http://tamilcinemablog.com/

    ReplyDelete
  5. மெளனமும் நட்பும்
    - nalla varigal

    ReplyDelete