Tuesday, July 27, 2010

பிரிவு

பிரிவு


'ஏக்கம்'
'எதிர்பார்ப்பு'
'மகிழ்ச்சி '
'துக்கம்'
உன்னால் மட்டுமே
இவ்வார்த்தைகளின்
முழுமையான பொருளுணர்ந்தேன்
இன்னும் ஒரு வார்த்தை
மிச்சம் இருக்கிறது
'மரணம்'

************************************

ஒரு துளி

உதிர்ந்த தண்ணீர்
தனக்குள் ஏற்றுக் கொண்ட பிம்பத்தை
உண்ண முடியாமல் துப்பிய மிச்சமாய்
மீண்டும் ஒரு துளி.

************************************

அது போதும்...

காற்றாக உன் இதையத்தில் நிறைய வேண்டும்
கண்ணோடு கண் பார்த்து கரைய வேண்டும்
காலம் அத்தோடு உறைய வேண்டும் 
அது போதும்... அது போதும்...

உன்னால் என் வாழ்க்கை மலர வேண்டும்
அன்றி இக்கணம் என்னுயிர் உதிர வேண்டும்
உதிர்கின்ற நேரம் உன் முகம் பார்க்க வேண்டும்
அது போதும்... அது போதும்...


-

9 comments:

  1. அருமை நன்பரே

    ReplyDelete
  2. கவிதைகள் நன்று! எழுத்துப் பிழைகளை தவிர்க்கவும்! (உம். 'உன்ன முடியாமல்')

    ReplyDelete
  3. @VELU.G வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  4. @Mugilan நன்றி நண்பரே.

    எழுத்துப் பிழையை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. திருத்தம் செய்துவிட்டேன்.

    ReplyDelete
  5. //அன்றி இக்கணம் என்னுயிர் உதிர வேண்டும்
    உதிர்கின்ற நேரம் உன் முகம் பார்க்க வேண்டும்//
    ரொம்ப டெரரா இருக்கே ?!!

    //பிரிவு//
    //'மரணம்'//
    என்னாதிது சின்ன புள்ள தனமா ? லூஸ்ல விடுங்க பாஸ். எல்லாம் அங்க போய் பேசிக்கலாம் ;)

    ReplyDelete
  6. ///அன்றி இக்கணம் என்னுயிர் உதிர வேண்டும்
    உதிர்கின்ற நேரம் உன் முகம் பார்க்க வேண்டும்//
    ரொம்ப டெரரா இருக்கே ?!!//

    கொஞ்சம் ஆத்தர ஆத்தரமான காதல்.
    சீ.. ஆத்மார்த்தமான காதல்.



    ////பிரிவு//
    //'மரணம்'//
    என்னாதிது சின்ன புள்ள தனமா ? லூஸ்ல விடுங்க பாஸ். எல்லாம் அங்க போய் பேசிக்கலாம் ;)//

    சும்மா தமாசு :)

    ReplyDelete
  7. மூன்றுமே நல்லாயிருக்கு பாலமுருகன்.முதல் கவிதை உணர்வோடு இயல்பாயிருக்கு.என்றாலும் உணர்ச்சி வசப்படும்போது அசட்டுத்தனமாக முடிவெடுக்கிறோம்.தவிர்த்துக்கொள்வோம் !

    ReplyDelete
  8. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹேமா.

    ReplyDelete
  9. எங்கே நண்பா ஆளையே காணோம் ?
    என்னது Onsite-yaa?

    ReplyDelete