சாதி - த்தூ!

Posted by : Balamurugan | Thursday, April 1, 2010 | Published in

இன்று காலையில் இருந்து வேறு வேலைகள் எதுவும் இல்லாததால் முழு நேரமும் வலை உலகை சுற்றிக் கொண்டிருந்தேன். ஆனால் பெரும்பான்மையான பதிவுகள் சாதி மற்றும் பார்பனீயம் சார்ந்ததாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் தனி மனித தாக்குதல்கள் நிறைந்தவையாகவும் இருந்தது.

கணிப்பொறி உபயோகிப்பவர்கள் அனைவரும் படிப்பறிவு உள்ளவர்கள் தான். அவர்கள்தான் பதிவுலகில் கோலோச்சுகிறார்கள். ஆனாலும் அவர்களிடையேதான் இந்த சாதி பிரச்சனை மற்றும் தனி மனித தாக்குதல்கள் அதிகம் இருப்பதாகத் தோன்றுகிறது.

ஏம்பா, உங்க சாதி வெறிய காட்டுறதுக்கு இந்த பதிவுலகம்தான் கிடைத்ததா, ஏதாவது முச்சந்தியில போய் நின்னு கத்துரதுதானே, இந்த சாதிக்காரன் என்னை அவமதிக்கிறான், இவனாலதான் என்னோட சாதி பின்தங்கிய நிலையில் இருக்கிறது  என்று.

முடியாதுள்ள, ஏன்னா பதிவுல பின்னூடத்துல தான் கும்ம முடியும், ஆனா அங்க குனிய வெச்சு நெஜமாலுமே கும்மிடிவாங்க.

அட, ஒருத்தன உங்களுக்கு பிடிக்கலையா அவன் முகத்துக்கு நேரா அத சொல்லுங்களேன். அத விட்டுட்டு, அவுங்க முன்னாடி பல்ல காட்டிட்டு, அப்புறமா வந்து பதிவுல என்ன தப்பு தப்பா எழுதறது.

நாளைக்கு புதுசா எழுத வர்றவங்க உங்களைப் பார்த்து கத்துக்கிற மாதிரி இருக்கணும் உங்க எழுத்து. பதிவுன்னாலே அடுத்தவனை போட்டு தாக்கறது தான் முதன்மையான குறிக்கோள் அப்படிங்கற மாதிரி இருக்ககக் கூடாது.

ம்ம்ம்... நம்ம சொல்லி என்ன ஆகப் போகுது, இருந்தாலும் மனசில பட்டதை சொல்லிட்டேன்.

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

(22) Comments

  1. Sabarinathan Arthanari said... April 1, 2010 11:38 PM
  2. Jo Amalan Rayen Fernando said...

    உலகம் விசித்திரங்கள் நிறைந்தது; பலபல் கருத்துக்கள் ஒன்றோடன்று மோதும். மக்க்ள் என்றுமே ஒருவருக்கொருவர் ஒரே கருத்தையும் எண்ணத்தையும் கொள்வதில்லை.

    ஒருவருக்கு எது சுகமோ; அதே மற்றவருக்கு துக்கமாகலாம். எது துக்கமே அது சுகமாகலாம்.

    பதிவுலம் ஒரு ப்ரந்த பொது மேடை. தனிநபர் வலைப்திவுகள் அவரவர் தமது உணர்ச்சிகள்க்கொட்டி எழுத்த்தான். பிடித்தவர் படிக்க்லாம். பிடிக்காதவர் முகத்தைத் திருப்பிக்கொள்ளலாம்.

    இப்படித்தான் எழுதவேண்டும் அப்படி எழுதக்கூடாது என்பது வலைபதிவுலக்ததை ஒரு வகுப்பறை ஆக்கி விடும்.

    ஏன் உங்களுக்கு இந்த் வம்பு வேலை? தனிநபர்கள் தாக்கப்பட்டால், அவர்களே அதை எதிர்த்துப் போராடலாம். சட்டங்கள் இருக்கின்றன. cyber lawவும் வந்து விட்டது.

    நீங்கள் ஏன் வருந்துகிறீர்கள்? அவரவர் வேலையை அவரவர்கள் பார்த்துக்கொள்வார்கள்

    April 1, 2010 11:48 PM
  3. Jo Amalan Rayen Fernando said...

    சாத்திதூ என்று முதலில் பின்னூட்டமிட்டு துப்பியவர் தன் ஜாதிக்காக வால்பிடிப்பவர் என்பதை அவர் வலைபதிவில் கண்டுகொள்ளலாம்.

    April 1, 2010 11:49 PM
  4. Sabarinathan Arthanari said...

    என்னுடைய சாதி எது என உங்களுக்கு எப்படி தெரியும் அமலன்? என்னுடைய சாதியை/இனத்தை உங்களை போல என் பெயரில் கூட நான் வைத்து கொள்ளவில்லையே ?

    முற்போக்கு யோக்கிய சிகாமணிகளின் இலட்சணம் இப்படி தான் இருக்கும் :)

    April 1, 2010 11:57 PM
  5. Sabarinathan Arthanari said...

    அமலன் என்னுடைய முதல் கமெண்டை அப்படியே படித்து கொள்ளவும்

    April 1, 2010 11:58 PM
  6. பாலமுருகன் said...

    Jo Amalan Rayen Fernando

    என்ன சொல்ல வருகிறீர்கள்! அவரவர் பதிவுகளில் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளலாம், அது பற்றி மற்றவர் எதுவும் சொல்லக் கூடாது என்று கூறுகிறீர்களா? அதுவும் சாதி என்னும் போது பிரச்சனையை பற்றி பேசும் போது நான் எனது கருத்தை சொல்வது வீண் வேலையா?

    April 2, 2010 12:01 AM
  7. A.Muthu Prakash said...

    சாதிக்கு த்தூ ... பர்பானியத்துக்கு த்தூ... அ-பார்பானியத்துக்கும் த்தூ... டோண்டுவுக்கு த்தூ... டாக்டருக்கு த்தூ த்தூ... இவங்க ரெண்டு பேரோட PRO களுக்கும் 1/2 த்தூ...

    பூனைகளுக்கு கட்டிடலாம் ; புலிகளுக்கும் கட்டிடலாம் .... நரிகளுக்கு மணி கட்ட நினைக்றதே பெரிய விஷயம்... கைய கொடுங்க பாலா...

    April 2, 2010 12:03 AM
  8. பாலமுருகன் said...

    A.Muthu Prakash

    நன்றி.

    நான் யாரையும் இந்த பதிவில் தனித்து குறிப்பிடவில்லை.

    April 2, 2010 12:12 AM
  9. பாலமுருகன் said...

    //முற்போக்கு யோக்கிய சிகாமணிகளின் இலட்சணம் இப்படி தான் இருக்கும் //

    நன்றாக கூறினீர்கள்.

    April 2, 2010 1:19 AM
  10. A.Muthu Prakash said...

    பாலா நானும் யாரையும் தனித்து குறிப்பிடவில்லை ... சேர்த்து தான் குறிப்பிட்டிருந்த்தேன்....

    ஞாயிறு மட்டுமே அழைக்கும் சென்னை நண்பி உலக அதிசயமாய் சற்று முன் அழைத்தாள் கைபேசியில் ..."எங்க டாக்டருக்கு மட்டும் எதுக்குடா ரெண்டு த்தூ..."என்று கோபித்தாள்...

    பார்ப்பானியம் எந்த அளவிற்கு வெறுக்கப்பட வேண்டியதோ அதே அளவுக்கு தான் காரணமின்றி இட உணர்வின்றி கடை விரிக்கப்படும் அ-பார்ப்பானியமும் தவிர்க்கப்பட வேண்டியதே ....ருத்ரன் அவர்கள் அதிகம் அறியப்படாத டாக்டர் மேரி அவர்களின் முக்யத்துவத்தை பற்றி எழுதியது பாராட்டப்பட வேண்டிய ஒன்று...ஆனால் "இந்து டாக்டர் ... கிறித்துவ டாக்டர்" என்றெல்லாம் எழுதுவது உளவியல் தெரிந்தவருக்கு அழகா என்ன ?

    .... அந்த பதிவில் டாக்டர் மேரி பற்றி 'ஆங்கில உலகின் முதல் பெண் மருத்துவர்' என்ற புளுகு மூட்டை வேற ... கூகிள் ஆண்டவர் உயிரோட இருக்கும் போதே எப்படித்தான் கூசாம புளுகுகிறார்களோ தெரியவில்லை ...இதை பற்றி டாக்டரிடம் பின்னூட்டமிட்டு இதற்கு பதிலளிப்பது உங்கள் உரிமை என்றால் ஒரு நாளாகியும் அவரிடமிருந்து எந்த பதிலுமில்லை ...கள்ள மௌனமா வேலை பளுவா என்று யாருக்கு தெரியும்


    ...நண்பியிடம் இதை விளக்கிய பிறகு அப்படியா விஷயம் என்று கூறி நள்ளிரவில் அழைத்ததற்கு சாரி கேட்டாள்...சிறிய மனுஷி ,பெரிய இதயம் ...ஆனால் நம்மில் பலர் பெரிய மூளைகள் இதயமோ கொஞ்சம் சிறிது ...


    என்ன சொல்லுகிறீர்கள் பாலா!

    April 2, 2010 1:34 AM
  11. பாலமுருகன் said...

    A.Muthu Prakash

    உண்மைதான், அவருடைய பதிவில் பொருட்பிழை இருப்பதாக கருதிய நீங்கள், அதை சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள்.

    பதிலுக்காக இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம் நண்பரே.

    April 2, 2010 1:48 AM
  12. A.Muthu Prakash said...

    பாலா ...டாக்டரின் படிப்புக்கும் அறிவுக்கும் முன் நான் எம்மாத்திரம்....

    பொருட் பிழை எப்போதும் ஒரு பொருட்டேயல்ல தோழரே ... அதன் பின்னால் உள்ள நுண் அரசியல் தான் வருத்தமடைய செய்கிறது... அதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நாமென்ன அமுல் பேபிக்களா பாலா..

    ஜெ வின் நைஜீரியா கட்டுரையில் ஒலித்த குரலின் இன்னொரு துருவம் தான் ருத்ரனின் டாக்டர் மேரி பற்றிய கட்டுரையிலும் ஒலிக்கிறது என்பதை நாம் எளிதாகவே புரிந்து கொள்ளலாம் ...படைப்பாளியின் சூது படித்தவனின் சூது நீங்கள் எந்த பக்கம் என்று கேட்டால் என்ன தான் செய்வீர்கள் நீங்கள் ?...

    இன்னொரு கருப்பு வெள்ளை சதுரங்க ஆட்டகளமா இணையமும் ?

    April 2, 2010 2:29 AM
  13. ராம்ஜி_யாஹூ said...

    google and worldpress have given us a clean, blank blog world. we bloggers dumped all dusts and dirtys here

    April 2, 2010 11:38 AM
  14. பத்மநாபன் said...
    This comment has been removed by the author.
    April 2, 2010 12:24 PM
  15. பத்மநாபன் said...

    காழ்ப்புணர்வில் ஊறிப்போனவர்களை அவ்வளவு சீக்கிரம் வெளியே கொண்டு வரமுடியாது .. புதியவர்கள் இனம் கண்டு தவிர்ப்பது நல்லது . குண்டுசட்டிக்கு வெளியே ஆக்கப்பூர்வமான செயல்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளவேண்டியவையும் எதிர்கொள்ளவேண்டியவையும் உலகத்தில் நிறைய இருக்கிறது. நானும் கூட சில நம்பிக்கைகளை புண்படுத்தும் பொழுது உணர்ச்சி வசப்பட்டேன் ..பின் வேண்டுமென்றே செய்பவர்கள் மீது உணர்ச்சி வசப்பட்டு என்ன பயன் ? சாதியம் எங்கு தலை தூக்கினாலும் அழுக்குதான் மிஞ்சும் .. இதற்க்கு மெத்த படித்தவர்களும் விதி விலக்கல்ல.. நல்ல எச்சரிக்கை பாலா ..பாராட்டுக்கள். இளைஞர் கூட்டம் தான் நம்பிக்கை தருகிறது.

    April 2, 2010 12:34 PM
  16. பாலமுருகன் said...

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பத்மநாபன்.

    April 2, 2010 1:26 PM
  17. Dr.Rudhran said...

    good post. i agree with your content.
    and regarding dr.mary scharleib, she is indeed the first woman doctor in the english speaking world. at her time however there were a couple of medical schools in the USA. she IS the first in the british world, of which india was a part.

    April 2, 2010 7:12 PM
  18. பாலமுருகன் said...

    வருகைக்கு நன்றி Dr.Rudhran

    சில நண்பர்களுக்கு எழுந்த சந்தேகத்தை இந்த பின்னூட்டம் மூலம் தெளிவு படுத்தி இருக்கிறீர்கள்.

    மிக்க நன்றி.

    April 2, 2010 9:00 PM
  19. A.Muthu Prakash said...

    ருத்ரரின் தளத்தில் பாலமுருகன் அவர்களின் பதிவை பற்றி குறிப்பிட்டிருந்தேன்... டாக்டர் அவர்களும் இங்கு வந்து தனது பாராட்டை வழங்கி சென்றது அனைவருக்கும் ,குறிப்பாக பிரபல (?) பதிவர்களுக்கு நல் உதாரணம்...

    டாக்டர் தனது பதிவில் "ஆங்கிலம் பேசும் உலகில் " என்றது காலனி நாடுகளை மட்டுமே குறிக்கும் என்றால் அவர் தெரிவித்தது சரியே ...

    dr.elizabeth blackwell...பட்டம் பெற்றது 1847 ல் ... இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர்...

    dr.elizabeth harret anderson...பட்டம் பெற்றது 1870 ல்...முதல் இங்கிலாந்து பெண்மணி ..

    dr.mary scharleib... பட்டம் பெற்றது 1881 ல் royal london school ல் இருந்து ... MMC யில் LMC முடித்தவர் ...

    புள்ளி விவரணைகளில் என்ன இருக்கிறது ... என்ன இருந்தாலும் டாக்டர் மேரி யின் சாதனை நாம் பெருமிதம் கொள்ளக் கூடியது தானே பாலா...

    April 3, 2010 2:15 AM
  20. பாலமுருகன் said...

    வாங்க பழமைபேசி,
    வருகைக்கு நன்றி.

    April 3, 2010 8:20 AM
  21. பாலமுருகன் said...

    //A.Muthu Prakash said... //

    //டாக்டர் மேரி யின் சாதனை நாம் பெருமிதம் கொள்ளக் கூடியது//

    நிச்சயமாக நண்பரே.

    April 3, 2010 8:22 AM
  22. ரிஷபன் said...

    அப்பாடா யாரேனும் ஒரு சிலராவது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்ற திருப்தி வருகிறது இந்த பதிவைப் பார்த்த பிறகு.

    அரட்டை அரங்கத்தில் வயசுக்கு மீறி வீர் வீர் என்று கத்துகிற சிறுவர் சிறுமியர்களைப் போலவே இந்த சில்லுண்டிப் பதிவர்களைப் பார்க்க வேண்டும்.

    விஷய ஞானமே இல்லாமல் காட்டுக் கத்துகிற கூட்டத்திடம் பின்னோட்டத்தில் சிலர் விவாதம் செய்வது வேடிக்கை.

    பதிவுலகில் நுழைந்த போது அடேயப்பா இவர் போன்றவர்கள்கூட வலையில் எழுதுகிறார்களா என்று நினைத்ததுண்டு ஆனால் அதே ஆட்களை, அய்யோ இவ்வளவு தானா இந்த ஆள் என்ற நிலையில் பார்க்க வேண்டியிருக்கிறது.

    பதிவு என்பதை நல்ல பொழுது போக்கு என்று எப்போது தமிழர்கள் உணர்வார்களோ தெரியாது.

    வேறு பதிவில் இப்படி எழுதினால் இன்னேரம் பிராமன அடிவருடி பட்டம் கிடைத்திருக்கும்

    April 10, 2010 1:49 AM

Leave a Response