அதிர்வுகள் - 3 (பதிவுலகம் என்னை மன்னிக்குமா!)

Posted by : Balamurugan | Wednesday, March 24, 2010 | Published in

பதிவுலகம் என்னை மன்னிக்குமா!

பதிவுலக நண்பர்களே என்னை மன்னித்து விடுங்கள். நேற்று நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதற்க்கு தலைப்பு 'கல்யாணம் ஆனவங்க இதை கண்டிப்பா படிங்க' என்று வைத்திருந்தேன். அது பேச்சிலர்களைப் பற்றி ஒரு இடுகை.

ஆனால், அந்த இடுகையில் இருந்த எழுத்துக்கள் என்னுடைய புது முயற்சி. தலைப்பை பார்த்து ஏதோ முக்கிய செய்தி என்று நினைத்து பலர் வந்திருந்தனர். எத்தனை பேர் அதை ரசித்தார்கள் என்று தெரியவில்லை.

அதை ரசித்தவர்கள் எனக்கு ஓட்டு போட்டு என் பதிவை பிரபலமாக்கினார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியை உரித்தாக்குகிறேன்.

ஒருவேளை அந்த பதிவு சிலருக்கு எரிச்சலை கொடுத்திருக்கலாம். ஏன் என்றால், அதில் அவர்கள் எதிர்பார்த்த செய்தி இல்லாமல் என்னுடைய புதிய நடை எழுத்தினை திணிப்பதாகவே இருந்தது.

என்றும் இல்லாத வண்ணம் திடீரென்று அத்தனை பேர் வந்தும் அவர்களின் எதிர்பார்ப்பை  நிறைவு செய்ய முடியவில்லையோ என்று என்னுள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்காகத்தான் இந்த பதிவு.

இதைப் பற்றி தங்களின் மேலான கருத்தை பத்தி செய்யவும்.

------------------------------------------------------

ஒரு சின்ன கவிதை

வயோதிகனான என்
வாழ்கை முடியப் போகிறது
இதுதான் வாழ்க்கை என்று
உணர்ந்து கொள்ளும் தருவாயில்

------------------------------------------------------

நன்றி .

-

(4) Comments

  1. Sabarinathan Arthanari said...

    கவிதையில் இருந்தது போல அவ்வளவு வயசானவர் மாதிரி தெரியலயே :)

    March 24, 2010 11:53 PM
  2. பாலமுருகன் said...

    அண்ணாச்சி,

    கவிதைக்கு பொய் அழகு!!!

    March 24, 2010 11:56 PM
  3. Madurai Saravanan said...

    கவிதை அருமை. வயதாக வயதாகத்தான் அனுபவம் வரும். வயதுமட்டுமே அனுபவமாகிவிடக்கூடாது. வாழ்த்துக்கள்

    March 25, 2010 12:19 AM
  4. பாலமுருகன் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி Madurai Saravanan,

    உண்மையில் வெறும் வயது மட்டுமே அனுபவமாகிவிடாது.

    //வயதுமட்டுமே அனுபவமாகிவிடக்கூடாது.//

    தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

    March 25, 2010 12:41 AM

Leave a Response